ரஜினிக்கு இளநீர் வாங்கி கொடுக்க மறுத்த யூனிட் ஆட்கள்… அதற்கும் அசராமல் இறங்கி போன அவர் குணம்….

Published on: February 27, 2024
---Advertisement---

Rajinikanth: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இன்று அவருக்கு கோலிவுட்டில் இருக்கும் மரியாதையே தனி ரகம். ஆனால் அவரின் சினிமா கேரியரின் தொடக்கத்தில் அவர் சந்தித்த அவமானங்கள் கணக்கில் இல்லாதது.  அப்படி ஒரு விஷயம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஜினிகாந்தின் சினிமா கேரியரின் ஆரம்ப காலத்தில் அவர் நடித்த திரைப்படம் புவனா ஒரு கேள்விக்குறி.  இப்படத்தை முத்துராமன் இயக்க பஞ்சு அருணாச்சலம் கதை எழுதியிருப்பார்.  இப்படத்தில் ஹீரோவாக சிவகுமார் நடித்திருக்க கிட்டத்தட்ட வில்லன் வேடத்தை ஏற்று இருப்பார் ரஜினிகாந்த். 

இதையும் படிங்க: வளர்ந்து கொண்டே இருக்கும் பாக்கியா!… மொத்தமாக ராதிகாவிடம் கையும், களவுமாக சிக்கிய கோபி!…

படத்தினைப் போலவே அப்போதைய காலத்தில் பிரபலமாக இருந்தவர் சிவகுமார் தான்.  அதனால் அவருக்கு படப்பிடிப்பில் ராஜ உபசரிப்புகள் நடக்கும்.  ஆனால் ரஜினியை சாதாரண ஜூனியர் ஆர்டிஸ்ட் போலவே அங்குள்ளவர்கள் நடத்தினார்கள்.  அந்த காலத்தில் ரஜினிக்கு இளநீர் குடிப்பது என்பது ரொம்பவே பிடித்தமான விஷயமாக இருந்தது.

யூனிட் ஆட்களிடம் இளநீர் கேட்டால் அவருக்கு கொடுக்க மாட்டார்களாம். இதனால் அவருடைய காசை கொடுத்து ஒன்றை வாங்கி வர சொல்லி குடிப்பாராம். அப்படி ஒரு நாள் அவரிடம் காசு இல்லாமல் போக அருகில் இருந்த புகைப்படக்காரர் அழகப்பன் இடம் இருந்து கடனாக வாங்கி இளநீருக்கு கொடுத்தாராம்.

இதையும் படிங்க: ‘ரோஜா’ படத்திற்கு பிறகு வாய்ப்பு கொடுக்காத மணிரத்தினம்! நடிகை சொன்ன ஷாக் சீக்ரெட்

இதை பார்த்துக் கொண்டிருந்தார் தயாரிப்பு நிர்வாகி ஒருவர் யூனிட் ஆட்களிடம் ஒரு இளநீர் வாங்கிக் கொடுக்க அவனை இவ்வளவு கஷ்டப்படுத்தும் நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஒரு நாள் அவன் இந்த கோலிவுட்டின் அடையாளமாவான் என கூறினாராம்.  

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.