லோகேஷ் என் ஆளு தான்!… ரஜினி எனக்கு போட்டி.. ஆனால் இது மட்டும் இல்லை… குஷியான கமல்!

Lokesh Kamal: தமிழ் சினிமாவின் உலகநாயகன் கமல் எப்போதுமே தன்னுடைய நடிப்பில் தனி கவனம் செலுத்துவார். பல வருட போராட்டத்தினை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான விக்ரம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. அந்த படத்திற்கு சிறந்த நடிகர் விருது வாங்கி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் கமல் பேசியது தான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாக்கி இருக்கிறது.
கொரோனா பிரச்னையால் ஊரே வீட்டிற்குள் முடங்கி இருந்த சமயத்தில் இனி திரையரங்குகள் அவ்வளவு தான் என பேச்சுக்கள் அடிப்பட்டது. ஆனால் தைரியமாக கமலின் விக்ரம் படத்தினை படக்குழு ரிலீஸ் செய்தது. அதற்கு முன்னர் முன்னணி நாயகர்களின் ப்ளாப்பால் துவண்டு இருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு இப்படம் மிகப்பெரிய பூஸ்ட்டாக அமைந்தது.
இதையும் வாசிங்க:வளரவளர வெட்டி விட்ட கதையா இருக்கே!.. வைரமுத்துவால் வாழ்க்கையை தொலைத்த கங்கை அமரன்
கமலுக்கும் பல வருடங்கள் கழித்து சூப்பர்ஹிட் படமாக விக்ரம் அமைந்தது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான 11வது சைமா தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டது. அதில் ‘விக்ரம்’ திரைப்படத்திற்காக கமலுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கிவிட்டு பேசிய கமல், தன்னுடைய இயக்குனரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
லோகேஷ் என்னுடைய ரசிகர் தான். அவர் ரஜினியை இயக்குவது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஆனால் அதற்காக அவருடன் போட்டி இல்லாமல் இல்லை. கடுமையாக போட்டி போடுவோம். எங்களால் முடிந்த வரை ஒருவரை ஒருவர் வெல்ல போராடுவோம். இதை நாங்கள் புரிந்து வைத்திருக்கோம்.
இதையும் வாசிங்க:மூச்சு விடாமல் இருக்கும் தமிழ்நாடு… விஜய் மீது பாசத்தை பொழியும் வெளிநாடுகள்.. என்ன நடக்குகிறது?
ரஜினிக்கும், எனக்குமான நட்பு இனி எந்த தலைமுறையிலும் இல்லை. இதற்கு முன்னரும் இருந்தது இல்லை. இதில் எனக்கு அகங்காரமெல்லாம் இல்லை. நாங்கள் அப்படி ஒரு நட்பை தான் இன்னமும் கொண்டு இருக்கிறோம் என்றார். பல தலைமுறை நடிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொள்ளும் போது கமல்-ரஜினியின் நட்பு பலரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
விக்ரம் படத்துக்காக கமலுக்கு விருது கொடுக்கப்பட்டது போல ஜெய்லர் படத்துக்காக ரஜினி விருது வாங்கும் பட்சத்தில் அவரும் இந்த நட்பு குறித்து சிலாகிக்கக்கூடும் என இப்போதே கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.