Rajinikanth: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த் தன்னுடைய கால்ஷூட்டை பராமரிப்பது பலருக்கு புரியாத புதிர் தான். இப்போ பரவாயில்லை. ஆரம்பகாலங்களில் நிறைய படங்களில் நடித்த போது எப்படி வைத்து இருந்தார் என்ற ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சினிமா உலகில் இருக்கும் பிரபலங்கள் எல்லாருமே வழக்கமாக கால்ஷீட் விஷயங்களைக் கவனித்துக் கொள்ள உதவியாளரை தங்களுடன் வைத்திருப்பார்கள். தேதியில் எதுவும் குளறுப்படி நடந்து விட்டாலும், விருப்பம் இல்லாத படங்களைத் தட்டிக்கழிக்கவும், பழியைப் அந்த உதவியாளர் மீது போட்டுவிட்டு நழுவி விடுவார்கள்.
இதையும் படிங்க: இப்பதான் உனக்கு அது தோனுச்சா?!.. படப்பிடிப்பில் விசித்ராவை பாடாய் படுத்திய கவுண்டமணி!..
ஆனால், ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் எப்போதுமே நேர் எதிரானவர். மற்ற விஷயங்களைக் கவனித்துக் கொள்ள அசிஸ்டெண்ட் வைத்து இருந்தாலும் கால்ஷூட் விஷயத்தை கவனித்து கொள்ள உதவியாளர்கள் வைக்க மாட்டார். ஒரு தயாரிப்பாளருக்குத் தேதிகளை அவர் முடிவு செய்துவிட்டால், அவரே கைப்பட எழுதிக் கையெழுத்திட்டு கொடுத்து விடுவாராம்.
எக்காரணம் கொண்டும் கொடுத்த அந்த தேதியை மாற்றவே மாட்டார். வேறு யாராவது அந்த தேதிகளில் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து ஓரிரு நாட்கள் கால்ஷூட் வேண்டும் எனக் கேட்டால், யோசிக்காமல் அந்த கால்ஷீட் உரிமையான தயாரிப்பாளர் அல்லது டைரக்டரிடம் நீங்களே நேரடியாக பேசிக்கொள்ளுங்கள் என்பாராம்.
இதையும் படிங்க: இன்னும் 10 நாட்கள் விட்டு இருந்தால் இவர் உயிரே போயிருக்கும்!… ரஜினிகாந்துக்கு கெடு விதித்த டாக்டர்கள்…
எக்காரணத்தினை கொண்டும் ரஜினியே தலையிட்டு தர்மசங்கடம் ஏற்படுத்தி விடவே மாட்டாராம் என ஏவிஎம் சரவணன் ஒருபேட்டியில் தெரிவித்து இருக்கிறார். மேலும், மனம் நோகும்படி எதுவும் செய்து விடவே மாட்டாராம்.
150 படங்களில் நடித்த ஜெய்சங்கர் `முரட்டுக்காளை’ படத்தில் வில்லனாக நடித்தார். அவருக்கு எங்குமே முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது எனக் கறார் காட்டிவிட்டார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
கங்குவா திரைப்படத்தில்…
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…