ரஜினிக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருது! தட்டிவிட்ட சக இயக்குனர்கள்… அட போங்க சார்!
கோலிவுட்டில் சொல்லப்படும் எல்லா கதைகளுமே சரியாக சொல்லப்படும் விதத்தால் பிரபலங்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் ஒரு நல்ல படத்தினை மிஸ் செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அப்படி நடந்த ஒரு சம்பவத்தால் ரஜினிக்கு கிடைக்க வேண்டிய தேசிய விருதே மிஸ்ஸாகி இருக்கிறது.
இளம் இயக்குனர்கள் நல்ல கதைகளை இயக்கும் போது அப்படத்தினை பார்த்து விட்டு அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து பாராட்டுவது தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பழக்கம். அப்படி இயக்குனர்கள் வரும் போது ரஜினியை பார்த்து பரவசமாகி பரபரப்பாக பேசுவார்கள். இல்லை அவர்களின் முகங்களிலே பரவசம் தெரியும்.
இதையும் படிங்க : கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த பிரபல இயக்குனர்… கடுப்பாகி ஆப்பு வைத்த உலக நாயகன்…
ஆனால் ஒரு சில வருடங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் ஒரு இயக்குனரை அழைத்து பாராட்ட வீட்டுக்கு வர சொல்லுகிறார். அதைப்போலவே, அவரும் ரஜினி வீட்டுக்கு அமைதியாக வருகிறார். அவருக்கு ரஜினியை பார்த்த போது பெரிய பரவசமாக எல்லாம் பில்டப் கொடுக்கவில்லை. ரொம்பவே அமைதியாக அமர்ந்து இருக்கிறார்.
அதுவே ரஜினிக்கு அவர் மீது ஒரு மரியாதையை கொடுத்து இருக்கிறது. வெற்றி இயக்குனராக இருந்த அவரிடம் எனக்கு ஒரு கதை சொல்லுங்கள் எனக் கேட்கிறார். அந்த இயக்குனரும் ஒரு ஒன்லைன் சொல்கிறார். அதைக்கேட்ட, ரஜினிக்கு ரொம்பவே பிடித்து இருந்தது. இதில் எனக்கு எந்த கேரக்டர் எனக் கேட்கிறார்.
இதையும் படிங்க: நல்ல மனுஷனை கேவலப்படுத்தியதே சோஷியல் மீடியா தான்.. விஜயகாந்த் சாமி மாதிரி தெரியுமா? புல்லரிக்க வைக்கும் எழுத்தாளர்!
இயக்குனர் இரண்டு கதாபாத்திரம் உங்களுக்கு எது பிடிக்குமோ செய்யுங்கள் என்றாராம். சரி நான் சொல்கிறேன் எனக் கூறி அனுப்பி இருக்கிறார். தன்னுடைய இயக்குனர்கள், நண்பர்களிடம் இதுகுறித்து கேட்கிறார். அதை கேட்ட அவர்கள், கதை நன்றாக தான் இருந்தது. ஆனால் உங்கள் படமாக இருக்காது. தியேட்டர் வரும் ரசிகர்கள் ஏமாறக்கூடும். வசூலில் கூட பிரச்னை ஏற்படலாம் என்றார்களாம்.
இதை தொடர்ந்து ரஜினிகாந்த் அந்த ஐடியாவையே கைவிட்டு விட்டார். தற்போது தன ஃபீல் செய்கிறாராம். காரணம் காக்கை முட்டை படத்தினை இயக்கிய அந்த இயக்குனர் மணிகண்டன். அவர் சொன்ன கதை கடைசி விவசாயி. இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் செய்யவே ரஜினிக்கு ஆசையாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது கடைசி விவசாயி சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.