Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் வளர்ந்த விதம் ரொம்பவே போராட்டமான ஒன்று தான். சின்ன ரோலில் நடித்து பின்னர் வில்லனாகி அதை தொடர்ந்து ஹீரோவாக நடித்தவர். இன்று அவரின் அடையாளம் கோலிவுட்டில் முக்கிய இடம் பிடித்து இருக்கிறது.
பிரபல இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்தவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ச்சியாக நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது. அப்போது பெரிய நடிகராக இருந்த கமல்ஹாசனுக்கே டஃப் கொடுத்தார். பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நிறைய படங்களிலும் நடித்தார்.
இதையும் படிங்க: அது பிக்பாஸ் பூர்ணிமாவா? இதுக்காகவே டிரெய்லரை பார்த்தவர்கள் ஏராளம் – என்ன படம் தெரியுமா?
மனிதனின் மறுபக்கம் படத்தில் முதலில் ரஜினிகாந்த் தான் நடிக்க இருந்தார். இயக்குனராக அவர் நடிக்க இருந்த அந்த படத்தினை பாலசந்தர் இயக்கி இருந்தார். புதுமுக நடிகையாக கீதா நடித்து இருந்தார். சில காட்சிகளும் ஒரு பாடலும் படமாக்கப்பட்டது.
ஆனால் என்ன காரணத்தாலோ அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. ரஜினி நடித்த அந்த பாடல் காட்சியை மட்டும் யுத்த காண்டம் படத்தில் ரஜினியை கேமியோ ரோலுக்காக காலகேந்திரா நிறுவனம் பயன்படுத்தி கொண்டது.
பாதியிலேயே நின்று போன திரைப்படத்தின் பெயரான மனிதனின் மறுபக்கம் என்ற பெயரை கே.ரங்கராஜ் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகுமார் நடிப்பில் உருவான படத்துக்கு வைக்கப்பட்டது. ஆனால் இரு படத்தின் கதையும் வேறு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திப்பாடகியையே அழ வைத்த இளையராஜாவின் இசை… அவ்ளோ உருக்கமான பாடலாம்!..
நடிகர் பிரதீப்…
Good bad…
நடிகர் கார்த்திக்கை…
Samantha: தென்னிந்திய சினிமாவில்…
ராணுவத்தை மையமாக…