Rajinikanth: ரஜினிகாந்த் என்னும் வில்லனை ஹீரோவாக மாற்றிய திரைப்படம் தான் முள்ளும் மலரும். ஆனால் அந்த படம் முதலில் தோல்வி நிலைக்கு போய் தயாரிப்பாளரை சோதித்த நிகழ்வு ஒன்று நடந்து இருக்கிறதாம்.
வேணு செட்டியார் திடீரென படம் எடுக்க ஆசைப்படுகிறார். அவர் பாலுமகேந்திராவிடம் கதை கேட்க அவர் சொல்லிய கதை தான். முழு பெரிய போராட்டத்துக்குப் பிறகு ரஜினியை வைத்து ஹீரோவாக படம் எடுக்கத் தொடங்கினார்கள். காளி என்ற வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: போஸ்டரிலே இவ்வளவு குழப்பமா?!. சரியா வருமா இளையராஜா பயோபிக்?.. ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..
இன்ஜினியர் வேடத்தில் சரத்பாபு நடித்திருப்பார். கிளைமாக்ஸில் கூட ரஜினிகாந்த் தன் தங்கையை இன்ஜினியர் கையில் பிடித்துக் கொடுக்கும் போது இப்பயும் உன்னை எனக்கு பிடிக்கல சார் எனக் கூறி செல்வார். இதைக்கேட்ட நடிகர் சரத்பாபு உண்மையிலேயே மனமுடைந்து ரயில் நிலையம் சென்று விட்டாராம்.
வேணு செட்டியார் தான் அவரை தேடி கண்டுபிடித்து என்னப்பா இங்க வந்துட்டே எனக் கேட்க ரஜினி எப்படி என்ன புடிக்கலைன்னு சொன்னார் என வருத்தத்துடன் சொன்னாராம். அதற்கு செட்டியார் காளிக்கு தான் இன்ஜினியரை பிடிக்கல. ரஜினிக்கு சரத்பாபு எப்பவும் பிடிக்கும் என நடிப்பு வேறு வாழ்க்கை வேறு எனப் புரிய வைத்து அழைத்து வந்தாராம்.
படம் முடிந்து முதல் காட்சியை பார்த்து விட்டு வந்த வேணு செட்டியார் பாலுமகேந்திராவை பார்த்து அடப்பாவி என் தலையில மண்ண போட்டுட்டியே. படத்துல வசனமே இல்ல. இந்த படம் எப்படி ஓடும் என கடிந்து இருக்கிறார். பாலுமகேந்திராவுக்கும் ரஜினிகாந்த்க்கும் படம் ஓடுமா என பயம் வந்திருக்கிறது.
இதையும் படிங்க: குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் சம்பளம் இத்தனை கோடியா?!.. 20 கோடிக்காக தயாரிப்பாளரை மாற்றிய ஏகே…
முதல் மூன்று வாரம் படத்திற்கு வரும் ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு சப்தமே இல்லாமல் கிளம்பி சென்று விடுகிறார்கள். மகேந்திரா மற்றும் ரஜினிகாந்த் படத்திற்கு பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்தால் கூட்டம் வரும் என கூறியிருக்கிறார்கள். ஆனால் வேணு செட்டியார் ஓடாத படத்திற்கும் பப்ளிசிட்டி தேவை இல்லை; ஓடுகிற படத்திற்கும் பப்ளிசிட்டி தேவை இல்லை என மறுத்து விடுகிறார்.
ஒரு கட்டத்தில் அவ்வளவுதான் நம்ம கதை முடிஞ்சுச்சு இந்த ராம் செட்டியார். ஆனால், நான்காவது வாரத்தில் இருந்து டிக்கெட்கள் விற்பனை படு ஜோராக நடந்ததாம். கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. பிளாக்கில் டிக்கெட் விற்கும் நிலையாகி போனதாம். படம் அமோக வியாபாரம் செய்தது.
நேரா பாலுமகேந்திராவை காண வந்த செட்டியார், ஒரு பிளான்க் செக்கை கொடுத்து உன்னை திட்டினதுக்கு என்னை மன்னிச்சிரு பா. எவ்வளவு வேணுமோ நீயே ஃபில் பண்ணிக்கோ என கூறினாராம். ஆனால் பாலு மகேந்திரா, இப்படி ஒரு படம் இயக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததே பெரிய தொகை தான் எனக்கூறி அந்த செக்கை வாங்க மறுத்துவிட்டாராம்.
இதையும் படிங்க: பயோபிக் படத்துக்கு இளையராஜாவின் சம்பளம் இதுதான்!. இந்த விஷயத்துல அவர் செம கறாரு!…
விஜய் டிவியில்…
SK_ Keerthi…
ஞானவேல் ராஜா…
Good bad…
கங்குவா திரைப்படத்தில்…