சிவாஜி படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்.. வெளியான தகவல்.!!
தமிழ் சினிமா உலகில் வசூல் சக்ரவர்த்தியாக, முடிசூடா மன்னனாக இன்றுவரை வலம்வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் மாபெரும் வெற்றிபெறுவதால் தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் பெரிய ஸ்டாராக இருக்கிறார் அவர்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 2007ல் வெளியான படம் சிவாஜி. இதில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார்.காமெடியனாக விவேக் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தார்.
இதில் வில்லனாக சுமன் நடித்திருந்தார். ஏ. ஆர்,ரகுமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. கருப்புபணத்திற்கு பணத்திற்கு எதிராக வெளியான இப்படம் இன்றுவரை ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக உள்ளது.
இதையும் படிங்க: அஜித் இப்படி மாறினதுக்கு அந்த சம்பவம்தான் காரணம்!… அவரே சொன்ன வீடியோ…..
வெளியானபோது இப்படம் 50 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இது ரஜினியின் இரண்டாவது 50 கோடி படமாகும். இதற்கு முன்னதாக ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் 50 கோடி வசூலித்திருந்தது. இதுவே தமிழில் முதல் 50 கோடி படமாகும்.
இப்படத்தில் முதலில் சுமன், விவேக், ஸ்ரேயா பாத்திரங்களில் வேறு நடிகர்கள் நடிக்க தேர்வானதாக தற்போது தகவல் வந்துள்ளது. இந்த மூன்று கேரக்டரில் முதலில் பிரகாஷ் ராஜ், வடிவேலு, ஐஸ்வர்யா ராய் ஆகியோரைத்தான் நடிக்க தேர்வு செய்திருந்தார்களாம். கால்ஷீட் இல்லாதால் அவர்கள் நடிக்கவில்லையாம்.
இதையும் படிங்க: சார் என்ன வச்சி ஒரு படம் எடுங்க ப்ளீஸ்.. விஜய் சேதுபதியே கெஞ்சிக்கேட்ட அந்த இயக்குனர்….
அதன்பின்னானரே இந்த மூன்று பேரை தேர்வு செய்தார்களாம். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.