Cinema History
சண்டைக்காட்சியில் நடிக்கும் போது ரஜினிகாந்த் இதை செய்யவே மாட்டாராம்… ஒரு அதிர்ச்சி சம்பவம்!…
Rajinikanth: ரஜினிகாந்த் சூப்பர்ஹிட் திரைப்படமான மூன்று முகம் படத்தில் நடிக்க ரஜினி எப்படி ஒப்புக்கொண்டார். சண்டை காட்சியில் அவர் செய்த விஷயத்தினை பார்த்து இயக்குனர் ஆன அதிர்ச்சி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.
டைரக்டர் ஏ.ஜெகநாதன் பத்திரிகையாளராக இருந்து, இயக்குனராக மாறியவர். எம்.ஜி.ஆர். நடிப்பில் “இதயக்கனி” உள்பட பல வெற்றிப்படங்களை கோலிவுட்டுக்கு கொடுத்தவர். பீட்டர் செல்வகுமார் எழுத்தில் உருவானது மூன்று முகம். இக்கதையை படமாக்குவது என்று சத்யா மூவிஸ் முடிவு செய்த உடன், பட வேலைகள் தொடங்கின.
இதையும் படிங்க: இரண்டு ரூபாயிற்கு மேல் பணம் இல்லாமல் போலீஸில் இருந்து தப்பித்து ஓடிய ரஜினிகாந்த்… சுவாரஸ்ய சம்பவம்!
படத்தினை யார் இயக்குகிறார்கள் என்று ஆர்.எம்.வீயிடம் ரஜினி கேட்டாராம். ஜெகநாதன் என்றாராம். அவர் யார் எனக் கேட்டபோது எம்.ஜி.ஆரின் இதயகனி படத்தினை இயக்கியவர் என்றார்களாம். அந்த படத்தினை தான் பார்க்கணுமே என ரஜினி கேட்டு பிரத்யேக ஷோவில் அந்த படத்தினை பார்த்தாராம்.
ரஜினி, இயக்குனர், சத்யா மூவிஸின் மானேஜர் பழனியப்பன் மூவரும் படம் பார்க்கின்றனர். படம் முடிந்ததும், “இந்தப்படத்தை எந்த வருஷம் இயக்கினீர்கள்?” என்று ரஜினி, ஜெகநாதனை பார்த்து கேட்டாராம். “1974-ம் வருஷம் எடுக்கப்பட்டு 1975-ல் ரிலீசானது” என்றாராம்.
உடனே ரஜினி, 1974-ல் நான் சினிமாவுக்கு வரவில்லை. அப்போதே எம்.ஜி.ஆர். சாரை வைத்து படம் எடுத்து இருக்கும் உங்கள் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சிதான் என உடனே ஓகே சொன்னாராம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை சென்னை துறைமுகத்துக்கு வந்திருந்த சரக்கு கப்பலில் 3 நாள் அனுமதி பெற்று ஷூட் செய்தார்களாம்.
இதையும் படிங்க: மாட்டிக்கினாரு யுவனு! கடைசில இந்த பாடலின் காப்பிதானா ‘விசில போடு’ பாடல்.. கலாய்க்கும் ரசிகர்கள்
இந்தப் படத்தின் சண்டைக் காட்சியில் ரஜினி பறந்து வந்து ரவுடிகளை அடித்து உதைப்பதாக வரும் காட்சியில், ஒரு தடவை `ஜம்ப்’ செய்யும்போதே, 4 பேரை உதைப்பது போல் காட்சி அமைக்கப்பட்டு இருந்ததாம். இது ரஜினிக்கே ஆச்சரியமாகி விட்டதாம். பெரும்பாலும் சண்டை காட்சி ஷூட்டிங் நடக்கும் போது ரஜினி அதிகமாக சாப்பிட மாட்டாராம்.
இப்படி இருக்க ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்கு ரஜினி வீட்டில் இருந்து மீன் குழம்பு சாப்பாடு வந்திருந்ததாம். ரஜினி இயக்குனரை, சார்! இன்றைக்கு என்னோடு சாப்பிட வாங்க என அழைத்து சென்றாராம். பாக்ஸை திறந்து அப்படியே மொத்தமாக இயக்குனருக்கு கொடுத்துவிட்டாராம். அவருக்கு ஒரு கை சாப்பாடை மட்டும் போட்டு ரசம் ஊற்றி சாப்பிட்டாராம்.
ஒரு கை சாதம் மட்டும் அவர் சாப்பிட்டதில் இயக்குனருக்கு அதிர்ச்சி. “ஏன் இப்படி?” என்று கேட்டாராம். அதற்கு ரஜினி, “சண்டைக் காட்சியில் நடிக்கும்போது நிறைய சாப்பிட்டால் ரசிகர்கள் விரும்புகிற மாதிரி காட்சி அமையாது” என ரஜினி கூறியதை கேட்ட இயக்குனருக்கு ஆச்சரியமாகி விட்டதாம்.
இதையும் படிங்க: அஜித் – ஆதிக் இணையும் படத்திற்கு வில்லனை செலக்ட் செய்த படக்குழு! போரடிக்காம இருந்தா சரி