Connect with us
yuvan

Cinema News

மாட்டிக்கினாரு யுவனு! கடைசில இந்த பாடலின் காப்பிதானா ‘விசில போடு’ பாடல்.. கலாய்க்கும் ரசிகர்கள்

Goat Movie: விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் கோட். இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர்கள் நடிக்கிறார்கள். ஏற்கனவே படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு ஒரு சயின்ஸ் ஃபிக்சன் படமாகவும் கோட் திரைப்படம் அமைய இருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் கோட் படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி முதலில் கோட் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என ஒரு அப்டேட்டை ஒரு விழா மேடையில் கூறினார். அவர் சொன்னதை போலவே நேற்று படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை விசில் போட வைத்திருக்கிறது. மதன் கார்கி வரிகளில் விஜய் குரலில் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் சிறப்பாக வந்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஒரு போட்டோவை வச்சி படத்தை ஹிட் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!..

அதிலும் விஜயுடன் பிரபுதேவா மற்றும் பிரசாந்த் ஆகியோரும் சேர்ந்து பாடலில் ஆடியிருப்பது மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளத். மூன்று பேருமே 50வயதை நெருங்கியவர்கள். இருந்தாலும் அவர்கள் ஆட்டத்தில் எந்தவிதத்திலும் எனர்ஜி குறைந்த பாடில்லை. அடிப்படையிலேயே பிரசாந்த் நடனம் கற்றவர். விண்டேஜ் காலத்தில் பிரசாந்தின் நடனத்தை பார்த்து பார்த்து ரசித்திருக்கிறோம்.

மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரசாந்தை கோட் படத்தில் ஒரு புது வித எனர்ஜியில் பார்க்கும் போது பிரசாந்த் ரசிகர்களுக்கு ஏதோ புத்துணர்வாக இருக்கிறது. விஜயின் பாடலை பொருத்தவரை ஒரு சிங்கிள் வெளியாகிறது என்றால் அந்த பாடலை ரசிப்பதை விட இந்த பாடல் வேறெந்த பாடலின் சாயலில் இருக்கிறதா என்றுதான் ஆராய்வார்கள். அந்த வகையில் விசில் போடு பாடலும் ஒரு படத்தின் பாடலில் இருந்துதான் யுவன் காப்பி அடித்திருக்கிறார் என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: என்னை பற்றி எஸ்.பி.பி சார் சொன்னதை மறக்கவே முடியாது!.. மைக் மோகன் நெகிழ்ச்சி…

ஜவான் படத்தில் ‘இந்த இடம் என் காடு’ என்ற பாடலில் வரும் மியுஸிக் தான் விசில் போடு பாடலிலும் இருக்கிறது. அட்லீ , அனிருத் வரிசையில் இப்போது யுவனும் சேர்ந்து விட்டார் என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema News

To Top