“மாறு வேஷத்தில் இருந்தும் கண்டுபிடிச்சிட்டாங்க”.. கூட்டத்தில் தெறித்து ஓடிய ரஜினிகாந்த்..

இந்தியாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்த் சில நேரங்களில் தனக்கு விருப்பமான இடத்திற்கு மாறு வேஷத்தில் செல்வது வழக்கம். ஒரு காலத்தில் இமயமலைக்கு அடிக்கடி பயணித்து வந்த ரஜினிகாந்த் அங்குள்ள மக்களோடு மக்களாக இயல்பாக இருப்பார். மிகவும் எளிமையாக ஒரு சாமியாரை போலவே இமயமலையில் ரஜினிகாந்த் அலைந்த பல புகைப்படங்கள் நமக்கு காணக்கிடைக்கின்றன.
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் இவ்வளவு எளிமையாக சுற்றுகிறாரே என பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு தென்படுவார். தமிழ்நாட்டிலும் அவர் மாறு வேடங்களில் சுற்றும் வழக்கம் உடையவர் என ரஜினிகாந்தே சில பேட்டிகளில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் மாறு வேஷத்தில் இருந்தும் சிக்கிக்கொண்ட ஒரு சுவாரசியமான சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “சிவாஜி”. இத்திரைப்படத்தை பெங்களூரில் மாறு வேஷத்தில் சென்று பார்த்துள்ளார் ரஜினிகாந்த். காட்சி முடிந்து வெளிவந்தபோது திடீரென அவருக்கு பின்னால் இருந்து “தலைவா” என்று ஒரு சத்தம் கேட்டிருக்கிறது.
அதிர்ந்து போன ரஜினிகாந்த் ஓடிச் சென்று காரில் ஏறிச்சென்றுவிட்டார். ஆனால் “தலைவா” என்று கூப்பிட்டவர் வேறு ஒருவரை தான் கூப்பிட்டிருக்கிறார் என அதன் பிறகு தான் தெரிய வந்ததாம். இந்த சம்பவத்தை மிகவும் கலகலப்பாக பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த சில ஆண்டுகளுக்கு முன் “எனக்கு புகழ், பணம் எல்லாம் இருக்கிறது. ஆனால் வெளியே நிம்மதியாக சுற்றமுடியவில்லை” என ஒரு நிகழ்ச்சியில் மிகவும் வருத்தத்துடன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.