மைக் மோகன்னு சொன்னாங்க!.. கடைசியில மனோபாலாவுக்கே சிலை வச்சிட்டாங்களா ரஜினி ரசிகர்கள்!..

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கார்த்தி எனும் ரசிகர் நடிகர் ரஜினிகாந்துக்கு கோயில் கட்டி 250 கிலோ கருங்கல்லில் சிலை வைத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த திருவுருவச் சிலையை பார்த்த ரசிகர்கள் எந்த சாயலிலும் அது ரஜினிகாந்த் போல இல்லையே என கலாய்த்து வருகின்றனர்.
யப்பா இது ரஜினி இல்லைப்பா மைக் மோகன் என்றே மீம்ஸ் போட்டு அந்த கோயிலை கட்டிய கார்த்தி எனும் ரஜினி ரசிகரின் மனதை எந்தளவுக்கு புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு புண்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் கூப்பிட்டும் போகல!.. உயிர் நண்பனிடம் 5 மாசம் பேசமால் இருந்த தளபதி!..
இந்நிலையில், அதற்கும் மேலாக வச்சு செய்யும் நோக்கத்துடன் தற்போது தொடர்ந்து ரஜினிக்கு சொம்படிக்கும் நோக்கில் விஜய்யின் லியோ படத்தை மரண மொக்கை என்றும் வசூல் அறிவிப்பே மிகப்பெரிய மோசடி என தொடர்ந்து அல்லும் பகலும் கூவிக் கொண்டிருக்கும் மனோபாலா விஜயபாலனுக்குத் தான் இந்த சிலையை ரஜினி ரசிகர் வச்சிருக்கார் என மனோபாலாவின் பரோடி கணக்கில் இருந்து வெளியான போஸ்ட் வைரலாகி வருகிறது.
இப்போ கரெக்ட்டா இருக்கு பாருங்கன்னு அந்த சிலைக்கு மனோபாலாவின் கண்ணாடியையும் மாட்டி விட்டு விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இப்படி இந்த முறை இரு தரப்பு ரசிகர்களும் மாறி மாறி ட்ரோல் செய்து வருவது எங்கே போய் யாரை காவு வாங்க போகிறதோ என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது.
இதையும் படிங்க: லியோ வசூல் கணக்கு எல்லாமே பொய்!.. சொன்னா மிரட்டுறாங்க!.. அடுத்த குண்டை வீசிய திருப்பூர் சுப்ரமணியன்…
நடிகர்கள் உடனடியாக எல்லை மீறும் ரசிகர்களை அடக்காவிட்டால் அதன் விளைவையும் நடிகர்கள் தான் சந்திக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.
Thank you @rajinikanth sir fans ❤️
I am forever grateful for your love.
????????????????????. ???????????????????? ???????? ???????????????????? ???? pic.twitter.com/vz1Eu22E5U
— Manobala Vijayabalan (Parody) (@Manovbala) October 27, 2023