rajini vijayakanth

கலைப்புலி தாணு தயாரிப்பில், ராஜசேகர் இயக்கத்தில், நடிகர் விஜயகாந்த் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் கூலிக்காரன். இந்த படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.. இந்த படம் அசத்தலான வெற்றியை பெற்றது.. இந்த படம் உருவானதற்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது.. வாங்க பார்ப்போம்..

கலைப்புலி தாணு தயாரித்து 1985ம் வருடம் வெளியான யார் படத்தில் ரஜினி ஒரு கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். படத்தை பார்த்த ரஜினிக்கு கலைப்புலி தாணு தயாரிப்பில் ஒரு படம் நடிக்கலாம் என தோன்றியது.. அதோடு அந்த படத்தை யார் படத்தை இயக்கிய சக்தி – கண்ணன் இருவரும் அந்த படத்தை இயக்க வேண்டும் என முடிவெடுத்தார்..

கலைப்புலி தாணுவை அழைத்து ரஜினி இதை சொன்ன போது ‘நீங்கள் இதை சொல்வது மிகவும் சந்தோஷம்.. ஆனால் சக்தி – கண்ணன் இருவரும் பிரிந்து விட்டனர்.. எனவே இப்போது அது நடக்காது’ என சொல்லியிருக்கிறார்.. அதற்கு ரஜினி ‘அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள்.. அமிதாப்பச்சன் நடித்த ஒரு ஒரு படம் இருக்கிறது.. அதை ரீமேக் செய்து நான் நடிக்க நினைத்தேன்.. ஆனால் இப்போது என்னால் அது முடியாது.. அந்த கதை விஜயகாந்த்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.. அந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி விஜயகாந்தை வைத்து எடுங்கள்’ என சொல்லியிருக்கிறார்.. அப்படி உருவான திரைப்படம்தான் கூலிக்காரன்..

இந்த படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்ததற்கு பின்னணியிலும் ஒரு கதை இருக்கிறது.. டி.ராஜேந்தர் தயாரித்து, இயக்கி, நடித்து உருவான மைதிலி என்னை காதலி படத்தை வெளியிடுவதில் டி ராஜேந்தருக்கு கலைப்புலி தாணு உதவியிருக்கிறார்.. அப்போது ‘உங்களை அடுத்த படத்திற்கு நான்தான் மியூசிக் டைரக்டர்’ என டி.ராஜேந்தர் சொல்லியிருக்கிறார்.. அந்த நட்பின் அடிப்படையில்தான் கூலிக்காரன் படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது..