More
Categories: Cinema News latest news

தயாரிப்பாளருக்கு ரஜினி சொன்ன ஜோசியம்… அப்படியே பலித்ததால் மிரண்டுப்போன படக்குழுவினர்… வேற லெவல்!!

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சந்திரமுகி”. இத்திரைப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார். சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பாக பிரபு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்குகளில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

Chandramukhi

ரஜினிகாந்த்தின் கேரியரில் மிகவும் வித்தியாசமாக அமைந்த திரைப்படமாக இதனை கூறலாம். “பாபா” திரைப்படத்தின் படு தோல்வியால் சோகத்தில் இருந்த ரஜினிகாந்த், நிச்சயமாக தனது அடுத்த திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்தார். அப்போதுதான் கன்னடத்தில் வெற்றிபெற்ற “ஆப்தமித்ரா” திரைப்படத்தை ரஜினிகாந்த் பார்க்க நேரிட்டது. அத்திரைப்படத்தை இயக்கிய பி.வாசுவை உடனே அழைத்து அத்திரைப்படத்தை ரீமேக் செய்யவேண்டும் எனவும் அதனை தாங்கள்தான் இயக்கவேண்டும் எனவும் ரஜினிகாந்த் கூறினாராம்.

Advertising
Advertising

(“ஆப்தமித்ரா” திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்த “மணிச்சித்ரதாழு” திரைப்படத்தின் ரீமேக் ஆகும்)

Chandramukhi

அவ்வாறுதான் சந்திரமுகி திரைப்படம் உருவானது. இந்த நிலையில் “சந்திரமுகி” திரைப்படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது “சந்திரமுகி” திரைப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையே தயாரிப்பாளர் பிரபுவுக்கு இல்லையாம். ஒரு நாள் ரஜினி அவரை அழைத்து “இந்த படம் வெளியாகி முதல் 7 நாட்கள் பெரிதாக பேசப்படாது. ஆனால் அதன் பிறகு இத்திரைப்படம் வெற்றித் திரைப்படமாக அமையும். நிச்சயம் இத்திரைப்படம் மாபெரும் வெற்றியை பெறும்” என்று பிரபுவிடம் கூறினாராம்.

Chandramukhi

அவர் கூறியபடியே “சந்திரமுகி” திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் அவ்வளவாக பேசப்படவில்லையாம். அதன் பிறகு அத்திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிம்புவுக்கும் கௌதம் மேனனுக்கும் இடையே எழுந்த பிரச்சனை… அப்போ வெந்து தணிந்தது காடு 2 அவ்வளவுதானா??

Published by
Arun Prasad