எப்படியாவது சேர்ந்துடுவாங்கன்னு நினைச்ச ரஜினி!.. இப்போ தனுஷ் – ஐஸ்வர்யாவால் கலங்கி நிக்கிறாரு!..

Published on: April 9, 2024
---Advertisement---

40 வயதாகும் நடிகர் தனுஷ் 42 வயது ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ய வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரொம்பவே மன வருத்தத்தில் உள்ளதாக மூத்த பத்திரிகையாளரான செய்யாறு பாலு பேசியுள்ளார்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். அண்ணன் செல்வராகவன் கதையில் அப்பா கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியான அந்த படம் தனுஷுக்கு சிறந்த ஓப்பனிங் படமாக அமைந்தது.

இதையும் படிங்க: அஜித்தை காப்பி அடிச்சேனா? என்ன வேணுனாலும் சொல்றதா.. ஃபுல் ஸ்டாப் வைத்த ராமராஜன்

அந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் ஹீரோவாக நடித்தார் தனுஷ். அதன் பின்னர் திருடா திருடி திரைப்படம் தனுஷுக்கு கமர்சியல் ஹீரோ அந்தஸ்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த தனுஷ், கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியினருக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். திருமணமாகி சுமார் 17 ஆண்டுகள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்து வரப் போவதாக அறிவித்தனர்.

இதையும் படிங்க: மீண்டும் வேதாளம் முருங்கமரம் ஏறுது டோய்… பாக்கியா காதல் பண்றாங்களோ!

தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் என்னும் படத்தை இயக்கினார். அந்த படத்தில் அப்பா ரஜினிகாந்தை மொய்தின் பாய் என்னும் கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடிக்க வைத்திருந்தார் ஐஸ்வர்யா. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல் படுதோல்வியை சந்தித்தது.

ஏற்கனவே தனுஷை வைத்து ’3’, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான வை ராஜா வை உள்ளிட்ட படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். அந்த இரண்டு படங்களும் சந்தித்த நிலையில் இயக்கத்தில் ஆர்வம் காட்டாமல் குடும்பத்தை கவனித்து வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை பிரிந்தவுடன் மீண்டும் இயக்குனராக மாறியுள்ளார்.

இதையும் படிங்க: அரை டவுசர்ல சும்மா அள்ளுது!… அந்த அழகை அப்படியே காட்டும் ஷிவானி நாராயணன்…

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவை அறிவித்தாலும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற கோரிக்கை வைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் எப்படியாவது ஒன்று சேர்ந்து விடுவார்கள் என ரசிகர்களும் அப்பா ரஜினிகாந்த்தும் நினைத்து வந்த நிலையில், நேற்று இருவரும் மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சட்டபூர்வமாக பிரிவதற்காக நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இதனால் 73 வயதான ரஜினிகாந்த் மிகவும் மன வருத்தத்தில் உள்ளதாக செய்யாறுபாலு தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.