Connect with us

Cinema History

இதுக்கு ஏன்டா நான் ஃபீல் பண்ணனும்.. மணிரத்னம் படத்தில் கஷ்டப்பட்ட ரஜினிகாந்த்..!

Rajinikanth: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாருக்கே ரொம்பவே கஷ்டமான படம் என்றால் அது தளபதி தான் என்பதை தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். வைராலும் அந்த பேட்டியில் ரஜினி சொன்ன சில ஆச்சரியமான கருத்துக்களும் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்தது.

காவியங்களை இயக்குவதை வழக்கமாக கொண்டு இருந்தவர் மணிரத்னம். அவரின் படங்களுக்குள் எல்லா வரலாற்று காவியம் அடங்கி இருக்கும். அப்படி கிட்டதட்ட ஒரு குட்டி மகாபாரதமாக உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் தளபதி. இப்படத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீவித்யா, ஷோபனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையும் படிங்க: கனகா கேட்ட ஒரே ஒரு உதவி! அத பண்ணிட்டா ஹேப்பி ஆயிடுவா – துணிந்து இறங்கும் குட்டிபத்மினி

குந்திதேவி கதை, கர்ணன்-துரியோதனன் நட்பு அருமையாக சொல்லப்பட்டு இருக்கும். இப்படம் மிகப்பெரிய வசூலையும், வரவேற்பையும் பெற்றது. மணிரத்னத்தின் கேரியரில் முக்கிய இடத்தை பிடித்தது தளபதி. மேலும் ரஜினிகாந்தின் நடிப்பில் வேறு ஒரு பரிணாமத்தினை காட்டி இருப்பார்.

ஆனால் ரஜினிகாந்த் ஒரு பேட்டியில் கேட்ட போது இந்த படம் தான் நான் அதிகமாக கஷ்டப்பட்ட திரைப்படம். நான் பாலசந்தர் பள்ளியில் இருந்து வந்தவன். ஆனால் மணிரத்னம் பள்ளி வேறு மாதிரி இருந்தது. பொதுவாக எனக்கு சரியாக நடிக்க தெரியாது.

இதையும் படிங்க: சிவாஜி கணேசன் ஷூட்டிங் முன்னாடி இதை மறக்காம செஞ்சிடுவாராம்.. ஒருநாள் கூட மிஸ் பண்ணதே இல்லையாம்..!

google news
Continue Reading

More in Cinema History

To Top