பொங்கலுக்கு பொண்ணு ஏமாத்தினா என்ன?.. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த அப்பா வேட்டையன் ரெடியாகிட்டாரு!..

by Saranya M |   ( Updated:2024-01-14 06:39:31  )
பொங்கலுக்கு பொண்ணு ஏமாத்தினா என்ன?.. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த அப்பா வேட்டையன் ரெடியாகிட்டாரு!..
X

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் பிப்ரவரி 9ம் தேதி தான் படம் வெளியாகிறது என்றும் கணவர் தனுஷ் படத்துடன் போட்டிப் போடாமல் ஒதுங்கி விட்டார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், பொங்கலுக்கு ரசிகர்களை மகிழ்விக்க வேட்டையன் படத்தின் செம அப்டேட்டை வெளியிடப் போவதாக லைகா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. பொங்கலுக்கு ரஜினிகாந்த் படம் வரவில்லை என்றாலும் ரஜினிகாந்தின் பட அப்டேட் வருவதே ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என தெரிகிறது.

இதையும் படிங்க: தலைவர் 171-ல் நடந்த எதிர்பாராத திருப்பம்!.. லோகேஷை டீலில் விடுகிறாரா ரஜினி?!..

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் நடிப்பில் வேட்டையன் படம் உருவாகி வருகிறது. பாண்டிச்சேரியில் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை காலை 9.15 மணிக்கு பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் கலர்ஃபுல் போஸ்டர் வெளியாகும் என லைகா அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தி தெரியாது போயான்னு சொல்லிட்டு இந்தி படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!.. யாரு படம்னு பாருங்க!

Next Story