இந்தி தெரியாது போயான்னு சொல்லிட்டு இந்தி படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!.. யாரு படம்னு பாருங்க!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் ரகு தாத்தா படத்தில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் அந்த படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ரகு தாத்தா டீசரில் இந்தி தெரியாது போயா என்றும் இந்தி தெரிந்தால் தான் இந்த புரமோஷன் வேண்டுமென்றால் அப்படியொரு புரமோஷனே வேண்டாம் என அவர் சொன்னதும் இங்கே உள்ள தமிழர்கள் எல்லாம் கீர்த்தி சுரேஷுக்கு ஃபயர் விட்டனர். ஆனால், தற்போது கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தின் பூஜையில் நமஸ்கார்.. பஹூத் அச்சா என சொல்லிக் கொண்டு வரவேற்பு நடத்தியுள்ளதை பார்த்து பாதி பேர் டென்ஷன் ஆகி விட்டனர்.

சினிமாக்காரர்களை எதற்கும் அப்படியே நம்பக் கூடாது என்பதை கீர்த்தி சுரேஷ் நிரூபித்து விட்டாரே என அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே இந்தி படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு அஜய் தேவ்கனின் மைதான் படத்தில் நடிக்க உடல் எடையை எல்லாம் குறைத்தார். ஆனால், கடைசியில் பார்க்கவே சகிக்கல என அவருக்கு பாலிவுட் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதையும் படிங்க: பேராசையால எல்லாம் போச்சி!.. அயலானோட எல்லாம் ஓவர்!. நிம்மதி பெருமூச்சி விட்ட எஸ்.கே!..

நயன்தாராவை இந்தியில் அறிமுகப்படுத்திய அட்லீ தற்போது கீர்த்தி சுரேஷையும் இந்தியில் தனது தயாரிப்பில் அறிமுகப்படுத்தி உள்ளார்.

வருண் தவான் ஹீரோவாக நடிக்க உருவாக உள்ள தெறி படத்தின் இந்தி ரீமேக் படத்தை பாலிவுட்டில் அட்லீ தயாரித்து வரும் நிலையில், அந்த படத்தின் பிரம்மாண்ட தயாரிப்பு பூஜை போகி பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க: ‘லால் சலாம்’ படத்தில் மாஸ் காட்டும் தங்கதுரை! செகண்ட் சிங்கிளை வெளியிட்டு ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா

அதன் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரகு தாத்தா படம் வருவதற்கு முன்பே கீர்த்தி சுரேஷின் இந்தி படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், அந்த படத்தில் அவர் என்ன தான் இந்தியை எதிர்த்தாலும் ரசிகர்கள் பொங்க மாட்டார்கள் சிரித்து விடுவார்கள் என்கின்றனர்.

Related Articles
Next Story
Share it