Connect with us
laal

Cinema News

‘லால் சலாம்’ படத்தில் மாஸ் காட்டும் தங்கதுரை! செகண்ட் சிங்கிளை வெளியிட்டு ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா

Lal Salaam Movie: தற்போது கோலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 73 வயதிலும் இன்னும் அந்த மாஸை தனக்குள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.35 வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் ரஜினி அடுத்தடுத்து பல மாஸ் இயக்குனர்களுடன் கூட்டணி வைத்து நடித்து வருகிறார்.

ஜெயிலர் படத்தின் வெற்றி ரஜினியை எங்கேயோ கொண்டு சென்று விட்டது. இதுவரை இல்லாத அளவில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம்தான் அதிகளவு வசூலை பெற்றது. அதிலிருந்தே ரஜினியின் மாஸ் மற்றும் மார்கெட் இன்னும் அதிகரித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் கேப்டனை ஃபாலோ பண்ணும் விஜய்… அட இப்படி மாறிட்டாரா என்ன தளபதி?!…

அதே வெற்றிக்களிப்பில் ரஜினி தற்போது ஜெய்பீம் இயக்குனர் த.ச.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பாதி  முடிந்த நிலையில் இந்தப் படத்திற்கு பிறகு லோகேஷுடன் இணைய இருக்கிறார்.

அதற்கு அடுத்த படியாக மாரி செல்வராஜ், நெல்சன் என தன் லைன் அப்பில் அடுத்தடுத்து படங்களை வைத்து மிகவும் பிஸியாகவே இருக்கிறார். இதற்கிடையில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்திலும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருக்கிறார் ரஜினி.

இதையும் படிங்க: கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி இவர் வந்தார்! ‘கேப்டன் மில்லரை’ காப்பாற்றிய ஒரு கேரக்டர்

கேமியோ ரோலோக இருந்தாலும் லால் சலாம் படத்தில் ரஜினிக்கு அது முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாகத்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் லால் சலாம் படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று வெளியாகியிருக்கிறது.

லைக்கா நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் அந்த பாடல் அமைந்திருக்கிறது. பாடல் பெரிய அளவில் ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவுக்கு ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் அந்தப் பாடலை ஆரம்பித்து வைப்பதே விஜய் டிவி புகழ் தங்கதுரைதான். வைரமுத்து மாதிரி மிமிக்ரி செய்து சில டையலாக்கை பேச அதன் பிறகு சித் ஸ்ரீராம் பாடலை ஆரம்பிக்கிறார்.

இதையும் படிங்க: ஆளவிடுங்கடா சாமி!.. நான் பிக் பாஸ் பார்க்குறதே இல்லை!.. தெறித்து ஓடிய எக்ஸ் பிக் பாஸ் போட்டியாளர்!..

இதோ அந்த லிங்க்: https://x.com/LycaProductions/status/1746404289440829474?s=20

google news
Continue Reading

More in Cinema News

To Top