More
Categories: Cinema News latest news

தலைவர் 171, 172 மட்டுமில்லை!.. தலைவர் 173 படத்துக்கும் இயக்குநரை லாக் பண்ண ரஜினிகாந்த்?..

ஒரு பக்கம் கமல்ஹாசன் வரிசையாக படங்களை அடுக்கிக் கொண்டு போகிறார் என்றால், இன்னொரு பக்கம் நடிகர் ரஜினிகாந்தும் தனது வயதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஆர்வத்தை செலுத்திக் கொண்டே செல்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் தலைவர் 171 படம் தான் ரஜினிகாந்தின் கடைசி படம் என சிலர் கிளப்பி விட்டு வந்த நிலையில், அதெல்லாம் இல்லை பாஸ் ஜெயிலர் 2வை நெல்சனை வைத்து தலைவர் 172வது படமாக ரஜினி பண்ணப் போகிறார் என தகவல்கள் வெளியாகின.

Advertising
Advertising

இதையும் படிங்க: மண் குடிசை வாசல் என்றால்.. அறம் இயக்குநரின் அடுத்த தரமான படைப்பு!.. கருப்பர் நகரம் டீசர் இதோ!..

இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தை முடித்து விட்டு தலைவர் 173 படத்துக்கும் இயக்குநரை ரஜினிகாந்த் லாக் செய்து விட்டதாக கூறுகின்றனர்.

இந்த வயதிலும் சரியான நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவது, மேக்கப் போட்டு அந்த லைட்டுக்கு முன்பாக நின்று நடிப்பது என மக்கள் பணியை செய்ய முடியவில்லை என்றாலும், ரசிகர்களுக்கான பணியை செய்ய கடுமையாக நடிகர் ரஜினிகாந்த் உழைத்து வருகிறார்.

இதையும் படிங்க: அந்த டைரக்டர் என்னை தூங்கவே விடவில்லை!.. பல வருடம் கழித்து திரிஷா சொன்ன சீக்ரெட்..

இந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசி படமான மாமன்னன் படத்தை பார்த்த ரஜினிகாந்த் அதில் வடிவேலுவின் கதாபாத்திரத்தையும் பகத் ஃபாசில், உதயநிதி உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களையும் மாரி செல்வராஜ் செதுக்கிய விதத்தை பார்த்து ரொம்பவே ரஜினிக்கு பிடித்துப் போய் விட்டதாம்.

தா.செ. ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்துக்கு மாரி செல்வராஜும் ஒரு லைன் சொல்லி பிடித்துப் போனதாகவும் தலைவர் 173வது படமாக அது உருவாக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

Published by
Saranya M

Recent Posts