ரஜினியிடம் ராகவா லாரன்ஸ் கேட்ட அந்த விஷயம்.. வேறு யாருக்காகவும் ரஜினி அதை செய்யவே மாட்டார்..

Published on: August 20, 2023
rajni lawrence
---Advertisement---

நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே, ஹீரோவாக முனி, காஞ்சனா, கங்கா, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவற்றில் முனி, காஞ்சனா உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டானது.

இவர் நடன இயக்குநராக இருந்து, ஹீரோவானவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் நடன இயக்குநர் ஆனதற்கு ரஜினி தான் முக்கிய காரணம் என்று பலருக்கு தெரியாது. ராகவா லாரன்ஸ் குறித்து பல தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலுவின் அட்ராசிட்டி!.. ரெடியா இருங்க மக்களே!…

அதில் ராகவா லாரன்ஸ் சூப்பர் சுப்பராயனிடம் எடுபுடியாக வேலை செய்துகொண்டிருந்தபோது, ரஜினியிடம் அறிமுகம் செய்துவைத்து, இவர் மிகவும் நன்றாக நடனம் ஆடுவார், திறமையான பையன், மூளையில் கட்டி வேறு இருக்கிறது என்று சூப்பர் சுப்பராயன் கூறியுள்ளார். இதனை கேட்ட ரஜினி, லாரன்ஸ் மாஸ்டரை அழைத்து, நடனமாடி காட்ட சொல்லியிருக்கிறார்.

அதை  பார்த்து ஆச்சர்யப்பட்ட ரஜினி, தம்பி உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டுள்ளார். அப்போது லாரன்ஸ், பணம், வீடு, சிகிச்சைக்கு உதவி என்று ஏதாவது கேட்பார் என்று எதிர்பார்த்தபோது, எனக்கு நடன யூனியனில் மெம்பராக உதவி செய்வீர்களா என்று ராகவா லாரன்ஸ் கேட்டுள்ளார். உடனே ரஜினி அதற்கு ஏற்பாடு செய்தார்.

பின்னர் பேக் டான்சராக இருந்து டான்ஸ் மாஸ்டராக மாறி, தற்போது ஹீரோவாகியுள்ளார். இதற்கு முக்கிய காரணம் ரஜினி தான். அதேபோல, ரஜினிக்கு மிகவும் நம்பிக்கையான நபர் லாரன்ஸ். யார் கேட்டிருந்தாலும், சந்திரமுகி படத்தின் பார்ட் 2விற்கு ரஜினி சம்மதம் தெரிவித்திருக்க மாட்டார்.

ராகவா லாரன்ஸ் கேட்டார் என்ற ஒரே காரணத்திற்காக தான் ரஜினி ஒத்துக்கொண்டார். பாட்ஷா படத்திற்கே இரண்டாம் பாகம் வேண்டாம் என்று ரஜினி கூறிவிட்டார். இப்போது, லாரன்ஸ்க்காக மட்டும் தான் ரஜினி ஒத்துக்கொண்டார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- ரஜினியின் ஐடியாலஜி! நல்லா வொர்க் அவுட் ஆயிடுச்சு போல – ‘சந்திரமுகி 2’வில் மாஸ் காட்டிய லாரன்ஸ்

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.