லியோ FDFS பார்க்க ரெடியான ரஜினிகாந்த்!.. பின்ன அடுத்த படத்தை லோகேஷை நம்பி கொடுத்துருக்காரே!..

by Saranya M |   ( Updated:2023-10-15 04:46:31  )
லியோ FDFS பார்க்க ரெடியான ரஜினிகாந்த்!.. பின்ன அடுத்த படத்தை லோகேஷை நம்பி கொடுத்துருக்காரே!..
X

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை முதல் நாளே நடிகர் ரஜினிகாந்த் பார்க்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 525 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்த நிலையில், அடுத்ததாக ரஜினிகாந்த் லால் சலாம் படத்தில் கேமியோவும் தலைவர் 170 படத்திலும் நடித்து வருகிறார்.

வரும் பொங்கலுக்கு லால் சலாம் படம் வெளியாக உள்ள நிலையில், தலைவர் 170 படத்திற்கான படப்பிடிப்பு திருநெல்வேலியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: குழந்தை படமா இருக்கும்னு பார்த்தா!.. குழந்தை கொடுக்கிற படமா இருக்கும் போல தெரியுதே!.. என்ன நானி இதெல்லாம்?..

ஜெய்பீம் படத்தை இயக்கி உலக கவனத்தையே தன் பக்கம் ஈர்த்த த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பெரிய ஸ்டார் காஸ்ட்டே நடித்து வருகிறது.

அந்த படத்தை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171வது படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அந்த திரைப்படம் எல்சியூ இல்லை என்றும் ஸ்டாண்ட் அலோன் படம் என்றே லோகேஷ் கனகராஜ் கடைசி வரை தொல்லை கொடுக்கதீங்க பாஸ் என இப்போதே போட்டு உடைத்து விட்டார்.

இதையும் படிங்க: இத்தன பேர நடிக்க வச்சும் ஒருத்தரும் வரலயே!. இது என்னடா லியோ புரமோஷனுக்கு வந்த சோதனை!..

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தை முதல் நாளே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்க்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ள நிலையில், லியோ படத்துக்கு தனது முழு ஆதரவையும் வாழ்த்துக்களையும் ரஜினிகாந்த் தெரிவித்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.

தலைவர் 171வது படம் ஸ்டாண்ட் அலோன் படமாக இருந்தாலும், அதிலும் நிறைய மல்டி ஸ்டார் காஸ்டிங் இருக்கும் என்பதை லோகேஷ் உறுதிபடுத்தி உள்ளார்.

Next Story