ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியான லால் சலாம் திரைப்படம் வார இறுதி நாட்களிலாவது பிக்கப் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சன்டே வசூலும் செல்ஃப் எடுக்காமல் போய்விட்டது படக்குழுவினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மிகப்பெரிய கலெக்ஷனை அள்ளலாம் என நினைத்துக் கொண்டிருந்த லைகா நிறுவனம் அவரை மட்டும் நம்பியே அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு இப்படி ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது.
இதையும் படிங்க: சிவாஜி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு!. முடியாம போச்சி!.. இப்ப வரைக்கும் ஃபீல் பண்ணும் நடிகை…
ஆனால், கடைசியில் ‘3’, வை ராஜா வை படங்களைத் தொடர்ந்து ஹேட்ரிக் தோல்வியை தழுவி இருக்கிறார் லால் சலாம் திரைப்படம் மூலம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
லால் சலாம் படத்தின் தோல்விக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காரணம் இல்லை என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் காரணம் என ப்ளூ சட்டை மாறன் பேசியிருந்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்த பின்னர் ஜெயிலர் பட வசூலே பாதிப்பு ஏற்பட்டதாகவும் இனிமேல் ரஜினி படங்கள் பெரிய அளவில் கலெக்ஷனை அல்லுமா என்பது சந்தேகம் தான் என கூறுகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கணும்!.. பிரபலம் சொல்றத கேளுங்க!..
லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் நான்கு கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில் இரண்டாம் நாளில் மூன்று கோடி ரூபாயில் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை 2.8 கோடி ரூபாய் என ஒட்டுமொத்தமாக இதுவரை 9.8 கோடி ரூபாய் தான் வசூல் செய்திருப்பதாகவும் 10 கோடி ரூபாய் வசூலை கூட லால் சலாம் திரைப்படம் தொடவில்லை என்பது ஷாக்கிங் ரிப்போர்ட்டாக உள்ளது என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லால் சலாம் படத்தின் வசூல் பாதிப்பு அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையின் படத்திலும் எதிரொலிக்கும் அபாயம் உள்ளதாகவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. லைக்கா நிறுவனம் புரமோஷனை அதிகப்படுத்தினால் மட்டுமே வேட்டையன் வசூல் வேட்டை ஆடும் எனக் கூறுகின்றனர்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…