விஜய்க்கு ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கணும்!.. பிரபலம் சொல்றத கேளுங்க!..

அண்ணா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வில்வா ஜுவல்லரியை திறந்து வைக்கும் நடிகை வாணி போஜன் வருகை தந்தார். குத்து விளக்கு ஏற்றி வைத்து நகைக்கடையை திறந்து வைத்த நடிகை வாணி போஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்.

விஜய், விஷால் உள்ளிட்டவர்கள் அரசியலுக்கு வரப் போவதாக சொல்லி வருகிறார்களே அது குறித்து உங்கள் கருத்து என்ன? என வாணி போஜனிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வாணி போஜன், யாரெல்லாம் நல்லது பண்ண நினைக்கிறாங்களோ அவங்க எல்லாருமே அரசியலுக்கு வரலாம் என்றார்.

இதையும் படிங்க: பிரேமம் படத்துக்கு ஏன் கேஸ் போடல!.. சேரன் சொன்ன செம மேட்டரு.. அட்லீ ஹேப்பி ஆகிடுவாரு!..

விஜய்யின் அரசியல் வருகை குறித்து என்ன நினைக்கிறீங்க, விஜய் அரசியலுக்கு வந்தா மக்களுக்கு நல்லது செய்வாரா? என் செய்தியாளர் கேட்க, அவருக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்க வேண்டும். சான்ஸ் கொடுத்தால் தானே அவர் என்ன செய்கிறார் என்பது மக்களுக்குத் தெரியும். விஜய்யின் அரசியல் வருகை வரவேற்கிறேன் என பேசியுள்ளார்.

செங்காளம் வெப்சீரிஸில் அரசியல் களத்தில் வாணி போஜன் நடித்த நிலையில், அந்த வெப்சீரிஸ் பண்ணும் போது எனக்கும் அரசியல் மீது ஆசை வந்தது. இப்பவும் அந்த ஆசை இருக்கு, எதிர்காலத்தில் நானும் அரசியலுக்குள் நுழைய வாய்ப்பு இருக்கு என அதிரடியாக பேசி அரசியல் குறித்த கேள்வி எழுப்பிய செய்தியாளரையே ஆஃப் செய்து விட்டார்.

இதையும் படிங்க: குக் வித் கோமாளி புகழ் குழந்தை இப்போ யாரு கையில இருக்கு பாருங்க!.. அந்த படத்துல கிடைச்ச நட்பு அப்படி!

 

Related Articles

Next Story