Cinema News
வெளியில் இருந்தே ஆட்டம் காட்டும் ரஜினி – சர்வதேச தலைவர்களையும் அசரவைத்த ‘ஜெய்லர்’..
ரஜினி நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெய்லர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி, சிவராஜ்குமார், மோகன்லால், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் 10 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆன படம்தான் ஜெய்லர்.மிகுந்த பரப்பரப்புக்கு இடையே வெளியான இந்தப் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
வெளியான நான்கு நாள்களில் 300 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்துள்ளது. எல்லாருக்கும் இருக்கும் ஆச்சரியம் என்னவென்றால் இந்த வயதிலும் இப்படி ஒரு மாஸான ஆக்ஷன் படங்களில் எப்படி ரஜினியால் நடிக்க முடிந்தது என்பதுதான்.
இதையும் படிங்க : கமலின் வேலுநாயக்கர் இன்ஸ்பிரேஷன் இந்த அரசியல் பிரமுகர் தானா? யாருக்கும் தெரியாத சீக்ரெட்டினை உடைத்த பிரபலம்…
அதுமட்டுமில்லாமல் இளம் தலைமுறை நடிகர்களே வருடத்திற்கு ஒரு படம், இரண்டு வருடத்திற்கு ஒரு படம் வீதம் நடித்துகொண்டிருக்கும் போது ஒரே வருடத்தில் அடுத்தடுத்த மூன்று படங்களில் சோர்வே இல்லாமல் நடித்துக் கொண்டு வருகிறார்.
ஜெய்லர் திரைப்படத்தை ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கையில் முதல்வர் ஸ்டாலினும் பார்த்து ரசித்தார். மேலும் கேரளா முதலமைச்சர் பினரயி விஜயனும் பார்த்து ரசித்திருக்கிறார்.
இதையும் படிங்க : லட்சியத்தை அடைய வாழ்க்கையை தொலைச்சுட்டு நிக்கும் எஸ்.ஜே.சூர்யா! ஏன் அவருக்கு திருமணம் ஆகலனு தெரியுமா?
இப்படி அரசியல் தலைவர்களும் பார்த்து ரசித்த ஜெய்லர் திரைப்படத்தின் பெருமை சர்வதேச அளவிலும் உயர்ந்துள்ளது. மங்கோலியா நாட்டின் முன்னாள் அதிபர் பெங்களூர் வந்த போது அவரும் அவரது மனைவியும் ஜெய்லர் படத்தை பார்த்திருக்கிறார்கள்.
பொதுவாக மங்கோலியர்களுக்கு தமிழ் படங்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். குறிப்பாக ரஜினி என்றால் மிகவும் பிடிக்குமாம். படம் நன்றாக இருக்கிறது என பாராட்டியிருக்கிறார்கள். அரசியலுக்குள் குதித்து பல தலைவர்களை பந்தாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க அரசியல் வேண்டாம், சினிமாவில் இருந்தே என்னால் அனைவரையும் ஆட்டிப்படைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ரஜினி.