Connect with us
vettai

Cinema News

காத்திருந்து குறி வச்ச மாதிரி தெரியுது.. ‘வேட்டையன்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த லைக்கா

Vettaiyan Movie: ரஜினியின் நடிப்பில் த.ச.ஞானவேல் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் வேட்டையன்.ஜெயிலர் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படமாக இந்த வேட்டையன் திரைப்படம் அமைகிறது. இதற்கு முன் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதனால் ஜெயிலர் படம் மாதிரியே அடுத்த ஒரு அதிரடியான பெர்ஃபாமன்ஸை வேட்டையன் திரைப்படத்தில் கொடுப்பாரா என அனைவரும் எதிர்பார்த்துவருகின்றனர்.

த.ச. ஞானவேலை பொருத்தவரை ஒரு சமூக கருத்தை ஆழமாக மக்களிடம் எடுத்துரைக்கும் விதமாகத்தான் படங்களை கொடுப்பார். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஜெய்பீம் திரைப்படம். அந்தப் படம் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான ஒரு படமாக அமைந்தது.

இதையும் படிங்க: சரோஜா தேவியா?.. ஜெயலலிதாவா?!.. எம்.ஜி.ஆர் பட வாய்ப்பு தட்டி தூக்கியது யார் தெரியுமா?!..

இந்த நிலையில்தான் ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினி யாருடன் சேர்ந்து படம் பண்ணப் போகிறார் என்ற ஒரு ஆவல் இருந்தது. அதன் பிறகே த.ச. ஞானவேல் இந்தப் படத்திற்குள் நுழைந்தார். படத்திற்கு இசை அனிருத். படத்தை லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கிறது. ஏற்கனவே லைக்கா நிறுவனத்திற்கு பொருளாதார நெருக்கடி இருந்த நேரத்தில் படப்பிடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளி போனது.

இதனாலேயே விடாமுயற்சி படத்திற்கும் கொஞ்சம் ப்ரேக் ஏற்பட்டது. இப்போது வேட்டையன் திரைப்படத்தை ஒருவழியாக முடித்துவிட்டதால் அடுத்ததாக ஒரே பரபரப்பில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விடுவார்கள். இந்த நிலையில் வேட்டையன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை லைக்கா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: விரைவில் படம் ரிலீஸ்!.. வீட்டில் நடந்த துக்கம்!.. ரஜினி பட இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!..

இந்த வருடம் அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு பக்கம் ரஜினி என்றால் இன்னொரு பக்கம் கமலின் இந்தியன் 2 படம். அந்தப் படம் ஜூன் மாதம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக நேற்றுதான் அறிவித்துள்ளது.

கமலின் இந்தியன் 2 பட ரிலீஸ் தேதியை காத்திருந்து ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸை அறிவித்திருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.அடுத்தடுத்து லைக்கா நிறுவனம் பெரிய பெரிய நடிகர்களின் படங்களை கைவசம் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema News

To Top