விலை போகாத லால் சலாம்!.. சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை!.. கை கொடுத்த கலாநிதி மாறன்...
Laal salaam: எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் எப்போதும் எல்லாம் சரியாக அமையும் என சொல்ல முடியாது. சில சமயம் சில விஷயங்களுக்காக மற்றவர்களின் உதவிகளை பெற வேண்டிய நிலை ஏற்படும். அப்படி சூப்பர்ஸ்டார் ரஜினிக்கே சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் உதவிய சம்பம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் ரஜினி ஒரு கெஸ்ட்ரோலில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. கேமியோ வேடம் என்றாலும் ரஜினி நடித்தால் அது ரஜினி படமாக மாறிவிடும் என கணக்குப்போட்டுதான் இதை செய்திருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இதையும் படிங்க: என்னங்க மாயா எப்படி இருக்கீங்க? போட்டி முடிஞ்சாச்சு சண்டையை ஆரம்பிச்சிடலாமா? பிரதீப்பின் வைரல் ட்வீட்
இந்த படம் கிரிக்கெட்டையும், விளையாட்டில் மதமும், அரசியலும் எப்படி நுழைந்து விளையாடுகிறது என்பதையும் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டனர்.
இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதாக சொல்லப்பட்டது. ஆனால், பொங்கலுக்கு அயலான், கேப்டன் மில்லர் உள்ளிட்ட 4 படங்கள் வெளியானதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஒருபக்கம், இபபடத்தின் காட்சிகள் திருடு போய்விட்டதாகவும் சொல்லப்பட்டது.
இதையும் படிங்க: விக்கிக்கு நடந்தது நமக்கும் நடந்திருமோ? ‘ஏகே 63’ க்காக பக்கா ஸ்கெட்ச் போட்டு வேலையை ஆரம்பிக்கும் ஆதிக்
ஆனால், இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமை ஆகியவை விற்பனை ஆகவில்லை. அதனால் இந்த படம் போனி ஆகவில்லை.. அதனால்தான் இந்த படம் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை என விபரம் தெரிந்தவர்கள் சொன்னார்கள். இதைப்பார்த்து அப்செட் ஆன ரஜினி சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறனை அழைத்து ‘இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள்’ என கோரிக்கை வைக்க அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்தே இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இப்போது டிஜிட்டல் உரிமை விற்கப்படாமல் இருக்கிறது. அமேசான் அல்லது நெட்பிளிக்ஸ் என எதாவது ஒரு நிறுவனம் லால் சலாம் படத்தை வாங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: பைத்தியமா இந்த பையன்?!.. டி.எம்.எஸ்சை கலாய்த்த நபர்.. வரிஞ்சி கட்டிகொண்டு வந்த பி.யூ.சின்னப்பா…