எம்.ஜி.ஆரின் மாஸ் பட இயக்குனருக்கே பாடம் எடுத்த ராஜ்கிரண்… அதுவும் சூப்பர்ஹிட் படமா?

by Akhilan |
எம்.ஜி.ஆரின் மாஸ் பட இயக்குனருக்கே பாடம் எடுத்த ராஜ்கிரண்… அதுவும் சூப்பர்ஹிட் படமா?
X

Rajkiran: நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய பேச்சுத் திறமையால் எம்ஜிஆர் வைத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனருக்கே அறிவுரை சொன்ன சுவாரசிய சம்பவம் கோலிவுட்டில் நடந்திருக்கிறது.

1976 ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் பத்ரகாளி.இப்படத்தில் சிவகுமார், ராணி சந்திரா ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் "கண்ணன் ஒரு கைக் குழந்தை", "வாங்கோன்னா.." என பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்டாக அமைந்தது.

இதையும் படிங்க: கேப்டனால் அறிமுகமான இயக்குனர்!.. ஓபனிங் மாஸாக இருந்தும் பிக்அப் ஆகாமல் போன காரணம் என்ன?..

இந்நிலையில் ராஜ்கிரண் ஏற்கனவே பத்ரகாளி படத்தின் கதையை நாவலாக படித்து இருக்கிறாராம். ஒரு குறிப்பிட்ட காட்சியில் மட்டும் திரைக்கதையை வேறு மாதிரி செய்தால் படம் சூப்பர்ஹிட் அடிக்குமே என ராஜ்கிரணுக்கு ஆசை வந்து இருக்கிறது. ஆனால் இந்தத் திருத்தத்தை எப்படி ஏ.சி. திருலோகசந்தரிடம் சொல்ல முடியும்.

எம்ஜிஆர் நடிப்பில் 'அன்பே வா', சிவாஜி நடிப்பில் 'தெய்வ மகன்', 'பாரத விலாஸ்' என சூப்பர் டூப்பர் ஹிட்களை கொடுத்தவர். அவரிடம் போய் ஒரு விநியோகிஸ்தர் திருத்தம் சொன்னால் ஏற்றுக்கொள்வாரா? சொல்லவில்லை என்றால் படத்தின் வசூல் அடிப்படுமே எனக் குழப்பத்தில் இருந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: இந்த பாட்டுல நான் நடிக்க மாட்டேன்!. அடம்பிடித்த எம்.ஜி.ஆர்.. பின்னாடி அவர் படம்னாலே அதுதான்!..

இருந்தும் ஒரு தைரியத்தில் ஏ.சி.திருலோக்சந்தரை ராஜ்கிரண் சந்திக்கிறார். அவரும் இவரிடம் சொல்லுங்க எனக் கேட்க எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவே இல்லையாம். முதலில் அவரை கோபப்படுத்தக்கூடாது என முடிவெடுத்தவர். ஒரு ஐடியாவை பிடிக்கிறார்.

சார் நீங்க இயக்கிய இருமலர்கள் படம் ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு ரொம்ப பிடிச்ச படம் அது. இதை கேட்ட திருலோக்சந்தர் முகம் சட்டென மலர்ந்ததாம். அதை பயன்படுத்திக்கொண்ட ராஜ்கிரண் பத்ரகாளி படத்தில் இருக்கும் பிரச்னையை கூறிவிடுகிறார். கோபமாக மாறிவிடுவாரோ என பயப்பட அவர் நானும் நினைச்சேன் என்றாராம்.

அந்த காட்சியை நீங்க சொன்ன மாதிரி மாற்றினால் தான் இருக்கும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். சரியா சொல்லிட்டீங்க. உங்களை பார்க்கும் போது சாதாரணமாக தெரிந்தது. பின்னாளில் நீங்க பெரிய ஆளா வருவீங்க எனப் பாராட்டுயும் விட்டாராம். அந்த படம் பின்னர் குறிப்பிட்ட மாற்றத்துடன் வெளியாகி சூப்பர்ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கமல் அப்படி செய்வாருன்னு யாருமே எதிர்பார்க்கல!… கௌதம் மேனன் என்ன சொல்றார் பாருங்க!..

Next Story