Connect with us
vijayakanth

Cinema History

கேப்டனால் அறிமுகமான இயக்குனர்!.. ஓபனிங் மாஸாக இருந்தும் பிக்அப் ஆகாமல் போன காரணம் என்ன?..

விஜயகாந்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இயக்குனர் பாலு ஆனந்த் . இவர் விஜயகாந்தை வைத்து இயக்கிய முதல் படம் ஹிட் அடித்தது. அதன்பிறகு இவரது படமான அண்ணா நகர் முதல் தெரு மட்டும் ஹிட் அடித்தது. தொடர்ந்து கதைகளில் கவனம் செலுத்தாமல் யார் படம் என்றாலும் இயக்கியதால் பிளாப் படங்களையே தந்தார்.

கடைசியாக விஜயகாந்தே இவருக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்தார். அது தான் உளவுத்துறை. இந்தப்படத்திற்கு இவர் தான் கதை எழுதினார். படத்தில் சில காட்சிகளிலும் நடித்தார். அதன்பிறகு இவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார்.

Balu Anand, Vijayakanth

Balu Anand, Vijayakanth

இயக்கிய முதல் படம் நானே ராஜா நானே மந்திரி. இந்தப் படத்தில் திமிர் குணம் கொண்டவராக விஜயகாந்த் நடித்து அசத்தியிருப்பார். காமெடி, அடாவடித்தனம் கொண்ட படம். ராதிகா ஜோடியாக நடித்துள்ளார். இது மிகப்பெரிய வெற்றிப்படம். அடுத்து அவர் இயக்கிய படம் ரசிகன் ஒரு ரசிகை. இது சத்யராஜ் நடித்த படம். இது எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

1988ல் வெளியான படம் அண்ணா நகர் முதல் தெரு. சத்யராஜ், பிரபு, அம்பிகா, ராதா உள்பட பலர் நடித்துள்ளனர். இது சூப்பர்ஹிட் படம். பாடல்களும் செம மாஸ். உனக்காக பிறந்தேன் என்ற படம் 1992ல் வந்தது. பிரசாந்த், மோகினி உள்பட பலர் நடித்துள்ளனர். இது எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

Ulavuthurai

Ulavuthurai

ராஜாதி ராஜ ராஜகுலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்ற நீண்ட பெயரைக் கொண்ட படத்தை இயக்கியவரும் இவர் தான். இதில் மன்சூர் அலிகான், நெப்போலியன் உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு காமெடி படம்.

சிந்துபாத் என்ற படம் 1995ல் வெளியானது. மன்சூர் அலிகான், கஸ்தூரி, கோவை சரளா, செந்தில் உள்பட பலர் நடித்தனர். படம் பிளாப். அடுத்ததாக சந்தித்ததும், சிந்தித்ததும் படம். இது ஒரு காமெடி கலந்த லவ் ஸ்டோரி படம். இது அட்டர் பிளாப் படம்.

2014ல் பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த படம் ஆனந்த தொல்லை. கமர்ஷியல் காமெடி கலந்த படம். பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. அதிரடி என்ற படம் மன்சூர் அலிகான் நடிப்பில் வெளியானது. படம் முழுவதும் கவர்ச்சிமயமான பாடல்கள் நிறைந்தது. இது ஒரு அட்டர்பிளாப் படம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top