பெரிய இயக்குனரிடமே கரெக்ஷன் சொன்ன ராஜ்கிரண்!.. அப்பவே அவர் அதுல கில்லாடி!..
1976ல் வெளிவந்த படம் பத்ரகாளி. இந்தப் படத்தின் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர். இந்தப்படத்தை விநியோகம் செய்தவர் ராஜ்கிரண். அப்போது இவர் பெயர் ஏஷியன் காதர். ஏசியன் பிக்சர்ஸ் என்ற பெயரில் படங்களை வாங்கி விநியோகம் செய்வாராம்.
ராஜ்கிரண் பத்ரகாளி கதையை ஏற்கனவே நாவலாக படித்திருந்தாராம். அதை திரைக்கதையாக மாற்றும்போது கதையில் ஒரு இடம் மட்டும் அவருக்கு நெருடலாக இருந்ததாம். அதனால் அதை மட்டும் கொஞ்சம் மாற்றினால் படம் சூப்பர்ஹிட் ஆகி விடும் என்று அவருக்கு தோன்றியதாம். அதை பெரிய டைரக்டரான ஏ.சி.திருலோகசந்தரிடம் எப்படி போய் சொல்வது என யோசித்தார்.
இதையும் படிங்க... தக் லைஃப் படத்தில் கமலுக்கு மூன்று வேடமா? ஆனா அவரு ஒண்ணுமே சொல்லலையே!..
எம்ஜிஆரை வைத்து அன்பே வா, சிவாஜிக்கு தெய்வமகன், பாபு, பாரதவிலாஸ் என்று மிகப்பெரிய ஹிட்டுகளைக் கொடுத்தவர் அல்லவா? நாம் போய் திருத்தம் சொன்னால் ஏற்றுக்கொள்வாரா என்று சங்கடப்பட்டாராம். அதே நேரம் திருத்தம் சொல்லாவிட்டாலும் படம் எதிர்பார்த்த அளவு ஓடாது. என்ன செய்வது என்று குழப்பத்துடன் இருந்த அவர் வேறு வழியில்லாமல் அவரைப் போய் பார்த்தாராம்.
அப்போது அவரிடம் போய் நின்றதும், சொல்லுங்க தம்பின்னு இயக்குனர் கேட்டாராம். ஒரு கணம் தயங்கிய ராஜ்கிரணுக்கு சட்டென ஒரு பொறி தட்டியது. ஐயா, உங்களோட இருமலர்கள் நல்ல படம். எனக்கு ரொம்ப பிடிச்சது. அந்தப்படத்துல சிவாஜி, பத்மினி வசனம் அது இதுன்னு சொல்ல சொல்ல இயக்குனரின் மனம் குளிர்ந்து விட்டது. இதுதான் சரியான தருணம் என்று நினைத்த ராஜ்கிரண், பத்ரகாளி படத்தில் தான் சொல்ல வந்த திருத்தத்தையும் சொல்லி விட்டாராம். உடனே, வெரிகுட். நானும் இதைத் தான் நினைச்சேன்.
கரெக்டா சொல்லிட்டீங்க. நான் கூட உங்களை சாதாரணமா தான் நினைச்சேன்... நீங்க பெரிய ஆளா வருவீங்க தம்பி என்றாராம். அன்று அவர் சொன்னது போல இன்று உயர்ந்து நிற்கிறார் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ராஜ்கிரண். எந்த ஒரு விஷயத்தையும் பக்குவமா எடுத்துச் சொன்னால் தான் அது எடுபடும் என்பதை அன்றே தெரிந்து வைத்துள்ளார் ராஜ்கிரண்.
ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இவற்றில் அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களை இயக்கி நடித்துள்ளார்.