சிவாஜியின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட ரஜினி... எம்ஜிஆருக்கு காட்டிய டாட்டா

srmgr
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று உச்சநட்சத்திரமாக இருக்கிறார் என்றால் அவர் அந்த விஷயத்தை சாதாரணமாக செய்துவிடவில்லை. எத்தனையோ அவமானங்கள், கஷ்டங்களைத் தாண்டித்தான் இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறார். ஆனாலும் அவர் இன்றும் எளிமையாக இருப்பது தான் ஆச்சரியம் அளிக்கிறது.

annamalai
சினிமா உலகில் ரஜினிக்கும், கமலுக்கும் குருநாதராக இருந்தவர் இயக்குனர் கே.பாலசந்தர். இருவரும் இணைந்து நடித்த படம் தான் அபூர்வ ராகங்கள். ஆனால் ரஜினிக்கு இதுதான் முதல் படம்.
அந்தப்படத்தின் மூலம் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் திரையுலகில் சாதித்தது அசுரத்தனமான வளர்ச்சி. ஆரம்பகாலகட்டத்தில் சிவாஜியும், எம்ஜிஆரும் இவருக்கு அறிவுரை கூறினார்கள்.
சிவாஜி ரஜினிகாந்திடம் படப்பிடிப்புக்கு மட்டும் எப்போதும் லேட்டாக வந்துடாதே. அப்படி லேட்டா வர்றதுக்கு நீ வராமலேயே இருந்துடலாம்னு கூறியுள்ளார். அதே போல எம்ஜிஆரும் ரஜினியிடம் புகைப்பழக்கம், மதுப்பழக்கத்தை அடியோடு நிறுத்தி விடு. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று கூறியுள்ளார்.
இதில் சிவாஜியின் அறிவுரையை அப்படியே ஏற்றுக்கொண்டார் ரஜினி. எம்ஜிஆரின் அறிவுரையை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பது உங்களுக்குத் தெரியாதா என்னன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.ஏன்னா படங்களில் ரஜினி சிகரெட்டை ஸ்டைலாகப் பற்ற வைப்பது போன்ற காட்சிகள் பல படங்களில் வரும். அதே போல மது அருந்தி விட்டு உளறுவது போன்ற காட்சிகளும் வரும்.
Also read: கோட் படத்துல தெறிக்க விட்ட ஸ்பார்க் சாங்… 100 லாரி தண்ணீர், செட் போட 8 நாளாம்..!
அது கதைக்கு அவசியமாக இருந்தபோதும் எம்ஜிஆர் அப்படி தன் படங்களில் நடித்ததில்லை. அது தனது ரசிகர்களும் பின்பற்றக் காரணமாகி விடும். இன்னொரு விஷயம் தன் உடல் நலத்திற்கும் கேடு என்பதை உணர்ந்து இருந்தார்.
அதனால் தான் எம்ஜிஆர் இந்த ஆலோசனையை வளர்ந்து வரும் நடிகராக இருந்த ரஜினியிடம் தெரிவித்து இருந்தார். ஆனால் அண்ணாமலை படத்தில் எல்லாம் ரஜினி ஸ்டைலாக சிகரெட்டைப் பற்ற வைப்பது தான் அவரது டிரேடு மார்க்காக இருக்கிறது.
கமலின் ஆலோசனையைக் கூட ஏற்றுக் கொண்டு ரஜினி தனியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் சிவாஜியின் அறிவுரையையும் ஏற்றுள்ளார். எம்ஜிஆரின் அறிவுரையையும் ஏற்று இருக்கிறார். ஆனால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டாரா என்றால் அங்கு தான் இடிக்கிறது.