Connect with us
Kamal, Rajni

Cinema History

தயாரிப்பாளர் கொடுத்த பார்ட்டி… கமலிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி… இடைவிடாத நட்புக்கு இதுதான் அடித்தளமா?

இந்தியன் 2 படத்தைப் பற்றி கமல் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிகமாக விமர்சனம் செய்கிறார்கள். ரசிகர்கள் தான் ஒருவருக்கு ஒருவர் தங்கள் தலைவரைப் பற்றிக் குறை சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் ரஜினி, கமல் நட்பு அவ்வளவு தூய்மையானது. இருவருக்கும் நல்ல புரிதல் உண்டு. அதற்கு ஒரு சம்பவமும் காரணமாக அமைந்துள்ளது. வாங்க என்னன்னு பார்ப்போம்.

சூப்பர்ஸ்டார் ரஜினிக்குக் கல்யாணம் நடந்தது. தயாரிப்பாளர் பாலாஜியின் படங்களில் கமல், ரஜினி இருவருமே நடித்துள்ளனர். தயாரிப்பாளர் பாலாஜி ரஜினிக்கு பார்ட்டி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். அது அமர்க்களமாக நடந்ததாம். அந்தப் பார்ட்டியில் கமலின் சட்டைக்காலரை ரஜினி பிடித்தாராம். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது.

Rajni Kamal

Rajni Kamal

அப்போது கமல் ஓங்கி ஒரு குத்துவிட ரஜினி விழுந்து விட்டாராம். இப்படி ஒரு கிசுகிசு பிரபல வார இதழில் வந்ததாம். ஆனால் இது நடந்தது உண்மை தானாம். அடுத்த நாள் வாஹினி ஸ்டூடியோவில் சூட்டிங். அங்கு கமல், ரஜினி என இருவரது படங்களும் சூட்டிங் நடந்து கொண்டுள்ளது.

அப்போது ரஜினி வேகமாக நடப்பது வழக்கம். இப்போது நடப்பதை விட அப்போது ரொம்ப ஸ்பீடாக நடப்பாராம். அவர் வருவதைப் பார்த்த சிலர் கமலிடம் சார் ரஜினி சார் ரொம்ப வேகமாக வர்றாருன்னு சொல்ல, கமல் அதை வேறு விதமாகப் புரிந்து கொண்டாராம். மறுபடியும் சண்டைக்குத் தான் வருகிறார் என்று. சரி வரட்டும். பார்த்துக் கொள்வோம் என இருந்துவிட்டாராம் கமல்.

வேகமாக வந்த ரஜினியோ கமலின் இரு கரங்களையும் பிடித்தபடி, ‘மன்னிச்சிக்கங்க கமல். நடந்ததை மறந்துடுங்க’ன்னு சொல்ல கமல் ரஜினி சண்டைக்குத் தான் வருவாருன்னு பார்த்தா மன்னிப்பு கேட்குறாரே.. இது பெரிய மனுஷத்தன்மையா இருக்காரே. இவரைப் போய் தப்பா நினைச்சிட்டோமேன்னு வருத்தப்பட்டாராம்.

அதுக்கு அப்புறம் யார் நம்மைப் பற்றி என்ன சொன்னாலும் சரி. நமக்குள்ள நல்ல நட்போடு இருக்கணும். நம்ம பிரச்சனையை நாமே பேசி முடிச்சிக்கணும்னு முடிவு பண்ணினார்களாம்.

 

 

google news
Continue Reading

More in Cinema History

To Top