ரஜினிக்கு சூப்பரா பேட்ட… சூர்யாவுக்கு மட்டும் இப்படியா? சோலி முடிச்சிட்டாரே கார்த்திக் சுப்புராஜ்!

by sankaran v |   ( Updated:2025-05-03 03:35:35  )
petta karthik subbaraja surya
X

petta karthik subbaraja surya

Retro: கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம் இவ்ளோ சூப்பரா இருக்கும்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சேன்னு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் பல தகவல்களைச் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

ஏன் சூர்யா இந்த மாதிரி தொடர்ந்து படங்கள் பண்ணிக்கிட்டு இருக்காருங்கறது மிகப்பெரிய வருத்தமான செய்தியா இருக்கு. ரஜினியை வச்சி பேட்டன்னு நல்ல படம் கொடுத்தாரு. ஆனா சூர்யான்னு சொல்லும்போது ஏன் இந்த மாதிரி ஒரு அலட்சியம்? கார்த்திக் சுப்புராஜே எடுத்த படங்களைத் திரும்ப பார்த்தா கூட நாம இவ்ளோ நல்ல படங்கள் எடுத்திருக்கோமே ஏன் இப்படி யோசிச்சோம்கற முடிவாவது அவருக்குக் கிடைக்கும்?

சூர்யாவும், ஜோதிகாவும் சேர்ந்து பணத்தை அள்ளிக் கொட்டிருக்காங்க. இந்தக் கதையை ஏன் ஒரு நேர்க்கோட்டுல சொல்லத் தெரியலங்கறதை அவர் புரிஞ்சிக்கணும். என்ன காரணத்துக்காக இப்படி எடுத்திருக்காங்கன்னு தெரியல. ஸ்க்ரீன்பிளே, கதைன்னு எல்லாத்துலயும் கார்த்திக் சுப்புராஜ் கோட்டை விட்டுட்டாரு.

ரொம்ப நேர்த்தியா படம் எடுக்குறவரு. முந்தைய படங்கள் எல்லாம் அவ்ளோ அழகா இருக்கும். இன்னைக்கும் அதே ஸ்டைல்ல படம் பண்ணலாமே. யாரோ ஒரு இயக்குனர் வெட்டு, குத்து, அடிதடின்னு படம் எடுத்து ஜெயிச்சிட்டா, நாமும் அப்படி எடுக்கணும்னு அவசியம் இல்ல. அது அவர் பாணி ஜெயிச்சிட்டாரு. ஸ்கிரிப்ட்ல ஒரு கிளாரிட்டியே இல்லை.

ஈகோ பார்க்காதீங்க. பிரதீப் ரங்கநாதன், பார்க்கிங் டைரக்டர் மாதிரி ஒருத்தருக்கிட்ட போய் இந்த ஸ்கிரிப்டைப் படிச்சிட்டு சொல்லுங்கன்னு கேட்டுருக்கலாம். கரெக்ஷன்னா சொல்லுங்கன்னு கேளுங்களேன். என்ன தப்பு? இவ்ளோ பெரிய தொகையை போடுறாங்க. சூர்யான்னு பெரிய இமேஜ் இருக்கு. அப்படின்னா அந்த வெட்கம், மானம் எல்லாம் பார்க்காம கரெக்ஷன் என்னன்னு கேட்டுருக்கலாமே.

அது எதுவுமே பண்ணாம தான் என்கிற திமிரோடு பண்றது எல்லாம் ஒரு பெரிய அழிவுக்கு அறிகுறி. சூர்யாவுக்கே நான் சொல்றேன். இந்தக் கதையை ரஜினி, விஜய் எல்லாம் மறுத்த பிறகு சூர்யாகிட்ட வருது. அப்பவே உஷாரா ஆகியிருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story