இந்தியன் 2வுக்கு ரஜினியோட அந்தப்படம் எவ்வளளோ மேல்... இப்படி ஆயிட்டாரே தாத்தா!

by sankaran v |   ( Updated:2024-07-18 10:51:35  )
Kamal, Rajni
X

Kamal, Rajni

இந்தியன் 2 படம் கமல் நடித்த சமீபத்திய படங்களில் பெருத்த ஏமாற்றத்தைத் தந்து விட்டது. இதற்குக் காரணம் இந்தியன் படம் என்று கூட சொல்லலாம். ஏன்னா 96ல் இந்தியன் படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

அந்தப் படத்தின் மிகப்பெரிய தாக்கம் இந்தியன் 2 மற்றும் 3ம் பாகங்களை எடுக்கத் தூண்டியது. அதனால் ரசிகர்களும் அந்தப் படம் போல இந்தியன் 2வும் செம கிளாசிக்கலா இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்குச் சென்று இருப்பார்கள்.

ஆனால் படம் அவர்களது எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கி உள்ளது. அதனால் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும் அதிகரித்து வசூலை அதலபாதாளத்திற்குக் கொண்டு சென்று விட்டன. அந்த வகையில் இது பிளாப் என்றே சொல்லாம்.

படத்தில் பிரம்மாண்டத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. ஷங்கருக்கே உரிய திருப்புமுனை திரைக்கதை இல்லை. பாடல்கள் எடுபடவில்லை. அனிருத் மியூசிக் என எல்லாமே மைனஸ் பாயிண்ட் ஆகிவிட படம் படுதோல்வி அடைந்து விட்டது.

Annathe

Annathe

ரஜினியோட அண்ணாத்த, கமலின் இந்தியன் 2 என்ற இந்த இரண்டு படங்களில் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்த படம் அல்லது குறைவான நட்டத்தைக் கொடுத்த படம் எதுன்னு இலங்கை நேயர் ஒருவர் கேள்வி கேட்கிறார். அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இப்படி பதில் தெரிவித்துள்ளார்.

அண்ணாத்தே திரைப்படமும் எதிர்மறையான விமர்சனங்களைத் தான் சந்தித்தது என்றாலும் இந்தியன் 2 படத்துடன் ஒப்பிடும்போது அண்ணாத்தே படத்திற்கு வந்த விமர்சனங்களின் தாக்கம் கொஞ்சம் குறைவு தான்.

இந்தியன் 2 படத்தைப் பொருத்தவரை அதிகப்படியான எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அதனால் தான் இந்தியன் 2 படத்தின் வசூல் மிகப் பாதிப்படைந்துள்ளது.

அண்ணாத்தே படத்தோட தயாரிப்பு செலவோடு ஒப்பிடும்போது இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு செலவு கொஞ்சம் அதிகம் என்பதால இந்தியன் 2 படத் தயாரிப்பாளர்களுக்கு அண்ணாத்தே படத்தின் தயாரிப்பாளர்களை விட நஷ்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story