ரஜினி கஞ்சப்பேர்வழி… கமல் கஞ்சனுக்குக் கஞ்சன்… எதுக்கு இப்படி பொளக்குறாரு இந்த பிரபலம்?

by sankaran v |   ( Updated:2025-04-21 18:45:35  )
rajni, kamal
X

rajni, kamal

தக் லைஃப் படத்தில் கமலும், சிம்புவும் எப்படி இணைந்தார் என்பதே ஆச்சரியம்தான். அது மணிரத்னத்தால் மட்டும் தான் முடிந்துள்ளதாம்.

நாயகன் படத்தோட இன்னொரு பாகம்தான் இது. படம் நல்லா வந்துருக்கு. கமலும், சிம்புவும் ஒரு கேங்ஸ்டர். ஜோஜூவும், அசோக்செல்வனும் ஒரு கேங்ஸ்டர். இரண்டு தரப்பும் எப்படி மோதுதுங்கறதுதான் கதை. கமல் ஆஸ்கர் அவார்டு வாங்கணும்கற கனவுல நடிக்க வர்றாரு. அதுக்கு அடுத்ததாக நாம ஆஸ்கர் வாங்கணும் என்ற எண்ணத்துல சிம்பு நடிக்க வர்றாரு.

மிகப்பெரிய பிசினஸ் நடந்துருக்கு. ஓடிடில மட்டும் 150 கோடி வரை போயிருக்கு. கமலுக்கு ஒரு விக்ரம். சிம்புவுக்கு ஒரு மாநாடு. அப்படி இரண்டு பெரிய ஹிட்டை வச்சி வியாபாரம் நடக்கும் என்றதாலதான் இந்த இருவரையும் இணைத்து இயக்குகிறார் மணிரத்னம்.

ரஜினி 5000 கோடி சொத்து வச்சிருக்காரு. பொண்ணுக்குக் கல்யாணம் முடிக்கும்போது ரசிகர்கள் எல்லாம் வந்துருக்காங்க. சாப்பாடு இன்னைக்குக் கிடையாதுன்னு அனுப்பி வச்சாராம்.

கமலுக்கு லண்டன்லயும் வீடு இருக்காம். 5 ஆயிரம் கோடி சம்பாதிக்கல. ஆழ்வார்பேட்டை ஆபீஸ், வீடு, ஈசிஆர்ல வீடு. எனக்குத் தெரிஞ்சி அவரு போண்டியா ஆகிட்டாரு. பணம் இருந்தாதான் எல்லா மனைவியும் இருப்பாங்க. அவர் பணம் சேர்க்கல. அதுக்குக் காரணம் அவர் யாருக்கும் கொடுக்கல.

ரஜினி எப்படி கஞ்சத்தனமான பேர்வழியோ அதே போல கஞ்சனுக்குக் கஞ்சன்தான் கமலும். கமலிடம் எனக்குப் பிடிச்ச விஷயம் சினிமாவுல எந்த ஒரு புது இன்ஸ்ட்ரூமெண்ட் வந்தாலும் அதை வாங்கிடுவாரு. அப்படியே வாங்கி வாங்கி போண்டியா ஆகிட்டாரு. தங்கத்துல முதலீடு போடுறவங்க பெரிய ஆளா வருவாங்க. அப்படித்தான் ரஜினி ஆகிட்டாரு.

கமல் மட்டும் இல்லன்னா தமிழ்சினிமா இன்னும் டெக்னிகல்ல வளராம அப்படியே தான் இருந்துருக்கும். அவர் சினிமாவுல சம்பாதிச்சதை சினிமாவுலயே முதலீடு பண்ணினாரு. மேற்கண்ட தகவலை பிரபல இயக்குனர் நந்தவனம் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதற்கான வீடியோ லிங்கைக் காண:

Next Story