குட்பேட் அக்லி ரிலீஸ் குறித்து கேள்வி… ரஜினியோட ரியாக்ஷன் இதுதான்!

by sankaran v |   ( Updated:2025-04-10 01:10:40  )
ajith, rajni
X

ajith, rajni

good bad ugly and rajni: இன்று எங்கு பார்த்தாலும் குட் பேட் அக்லி பற்றிய பேச்சாகத்தான் உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டம் திரையரங்குகளில் களைகட்டி வருகிறது. வழக்கமாக அதிகாலை காட்சி என்றெல்லாம் இல்லாமல் இந்தப் படம் இந்தியா முழுவதுமே காலை 9 மணிக்குத் தான் திரையிடப்பட்டுள்ளது.

படத்தைப் பற்றி பாசிடிவ்வான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. விடாமுயற்சியில விட்டதை பிடிப்போம் என்ற தொனியில் அஜீத்தும் களம் இறங்கி பல கெட்டப்புகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் என்றே சொல்லலாம். இது தவிர அஜீத்தின் தீவிர ரசிகர்தான் ஆதிக் ரவிச்சந்திரன்.

அப்படி என்றால் அவர் அஜீத்தை வைத்து இயக்கும்போது எப்படி இருக்கும்? பார்த்து பார்த்து அஜீத்தின் கதாபாத்திரத்தை செதுக்கி இருக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் தீவிர ரசிகர். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். அதே போல ஆதிக்.

GBU ajithமுதல் காட்சியை ரசிகர்களுடன் இருந்து கார்த்திக் சுப்புராஜ் பார்த்துள்ளார். அதேபோல ஆதிக் ரவிச்சந்திரனும் ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் இருந்து படம் பார்த்துள்ளார். மதுரையில் ஒரு திரையரங்கில் ரசிகர்கள் அங்கப்பிரதட்சணம் எல்லாம் எடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் ரஜினியிடம் குட்பேட் அக்லி படம் இன்று வெளியாகி உள்ளது. அதைப்பற்றி நிருபர்கள் கேட்டபோது ரஜினி வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் என்று பதில் சொல்லி விட்டார். ரஜினியின் இந்த வாழ்த்து குறித்து ரசிகர்கள் ரஜினி அஜீத்தை வெறுமனே வாழ்த்த வில்லை. ஆசிர்வதித்து விட்டார் என்று சொல்கிறார்கள்.

விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகக் காலதாமதம் ஆனபோது அஜீத் தனது விருப்பமாக முதலில் குட்பேட் அக்லியைத் தான் ரிலீஸ் செய்யச் சொன்னாராம். அந்த வகையில் அஜீத்துக்கே ரொம்ப பிடித்த படம் குட் பேட் அக்லி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story