எம்ஜிஆர், சிவாஜி, கமலுக்கு எல்லாம் ஆங்கிலத்தில் அபிப்ராயம் சொன்ன ரஜினி..! அவருக்கு மட்டும் தமிழா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது ஸ்டைல். அடுத்ததாக அவரது எளிமை. வளர வளர பணிவு வர வேண்டும். அப்போது தான் மேலும் உயர்வு காண முடியும். இது தான் அனைவருக்குமே எழுதப்படாத விதி.
ஆரம்ப காலகட்டத்தில் வேணா ஓரளவு எல்லா நடிகர்களைப் பற்றியும் தன்னோட அபிப்ராயங்களை நடிகர், நடிகைகள் சொல்வாங்க. ஆனா வளர்ந்து வந்த காலகட்டத்துல அப்படி சொல்லணும்னா அவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில சங்கடங்கள் இருக்கும்.
ஆனா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கிட்ட விஜய் பற்றி என்ன நினைக்கிறீங்க? அஜீத் பற்றி என்ன நினைக்கிறீங்க? தனுஷ் பற்றி என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டா அவ்வளவு சரியாக பதில் சொல்வாரான்னு தெரியல.
ஆனா ஆரம்பகாலகட்டத்துல ஒவ்வொரு நடிகர், நடிகைகள் பற்றியும் தன்னோட அபிப்ராயத்தைச் சொல்லி இருக்கிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப் பற்றி கார்டியன் டு ஆல்னு சொன்னார். சிவாஜியைப் பற்றி ஃபாதர் தி அஃபெக்ஷன்னு சொன்னார்.
ஜெய்சங்கர் ஸ்போர்ட்டிவ்னஸ், சிவக்குமார் பஞ்சுவாலிட்டி, கமல் சின்சியாரிட்டி, விஜயகுமார் ப்ரட்டினஸ், ஜெய்கணேஷ் லவ்லினஸ், தேங்காய் சீனிவாசன் சென்ஸ் ஆஃப் ஹியூமர், சுருளிராஜன் கிரியேட்டிவிட்டி, கே.ஆர்.விஜயா தெய்வீகத்தன்மை, ஸ்ரீதேவி குயட்னஸ், ஸ்ரீபிரியா இன்டலிஜென்ஸ் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரைப் பற்றியும் ஒற்றை வார்த்தையில் அவர் சொன்னாலும் எல்லாமே 100 சதவீதம் உண்மை தான். அதை ஆங்கிலத்தில் சொன்னாலும் அவர் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தை தானே என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரம் கே.ஆர்.விஜயாவுக்கு மட்டும் தெய்வீகத்தன்மை என தூய தமிழில் சொல்லிவிட்டார். இது அவரது நடிப்புக்கே பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளது. ஏன்னா கே.ஆர்.விஜயா பக்திபடங்களில் நடிக்கும்போது அந்த அம்மனே தரையில் இறங்கி வந்தது போல தெய்வாம்சமாகக் காட்சி தருவார்.