யாரு உண்மையான ரசிகர்கள்? ரஜினியே ஆத்திரத்துடன் சொன்ன அந்தத் தகவல்...!

by sankaran v |   ( Updated:2024-09-13 02:43:53  )
Rajni
X

Rajni

'மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது' என்ற கதையாய் ரஜினி ரசிகர்கள் காத்திருந்து பார்த்தார்கள். புலி வருது புலி வருதுன்னு தான் சொன்னாங்களே தவிர எந்தப் புலியும் வரல. அப்படித் தான் ரஜினியின் அரசியல் வருகையும் இருந்தது. ஆனால் அவர் வரவே இல்லை.

rajni

இதனால் அலுத்துப்போன ரஜினி ரசிகர்கள் ஒரு கட்டத்தில் தேசிய முன்னேற்ற மக்கள் கழகம் என்று பேனர் அடித்து தலைவர் ரஜினின்னு போட்டு படத்தை எல்லாம் போட்டுட்டாங்க. அப்புறம் பொருளாளர், செயலாளர்னு பேரெல்லாம் போட்ட உடனே ரஜினிக்கு பயங்கர கடுப்பாயிடுச்சு. அதையும் தாண்டி எரிச்சல் வந்துடுது. இப்படி ஒரு ஆத்திரத்தை ரஜினி முகத்துல பார்த்தது இல்ல.

யார் யார் எல்லாம் இப்படி கட்சி பேரை போட்டு ஆரம்பிச்சிருக்காங்களோ அவங்களோட லிஸ்ட் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்தாகணும்னு சொல்லிட்டாரு. மன்றத்தோட அந்த லிஸ்ட் வந்தது. அதைப் பார்த்ததும் டிக் டிக் டிக்னு அடிக்கிறாரு. 1500 பேருக்கு மேல இருப்பாங்க. அவ்வளவு பேரையும் மன்றத்துல இருந்து தூக்குங்கன்னு சொல்லிட்டாரு. அதுக்கு தூக்கிட்டீங்கன்னா பெரிய பிரச்சனையா போயிடும். ரசிகர்களே இல்லாம போயிடுவாங்கன்னு சொல்றாங்க. இவங்க எல்லாம் என் ரசிகர்களே கிடையாது.

தியேட்டர்ல 50 ரூபா டிக்கெட் கொடுத்து படம் பார்க்குறான் பாரு. அவங்க தான் உண்மையான ரசிகர்கள்னு சொல்றாரு. இவங்கள்லாம் ரசிகர்களே கிடையாது. பயங்கரமான சுயநலவாதிகள். தூக்கிப் போடுங்கங்கறாரு. சத்யநாராயணராவும் வந்து கேட்டுப் பார்த்தாரு. இவர்கள் எல்லாம் ரஜினி மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள்னு ஒரு லிஸ்ட் வெளியாகுது.

நான் அரசியலுக்கு வருவதையும், வராததையும் நானே முடிவு பண்ணலை. யாரு கட்சி பேரு போட்டு என் படத்தைப் போட்டு அடிக்கிறதுக்கு அனுமதி கொடுத்தார்கள் என்ற கோபம் தான் அவருக்கு.

Also read: அவங்களுக்கு மட்டும் தனி சட்டமா?… சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ்!

அதன்பிறகு ரசிகர்கள் என்ன சொன்னாங்கன்னா உங்களுக்குப் பிறகு வந்த விஜயகாந்த் கட்சியை ஆரம்பித்து, கடகடன்னு வளர்ந்துட்டாரு. நீங்க ஏன் இன்னும் ஆரம்பிக்கல. உங்களையே தானே நம்பி இருக்கோம்னு அவங்க பக்கத்துல உள்ள நியாயத்தை சொல்றாங்க.

அதனால தான் இப்படி பண்ணிட்டோம்னு சொன்னதும் அப்புறம் சமாதானமாகி அவங்க மீண்டும் மன்றத்துல சேருறாங்க.அவர்கள் மீண்டும் சேர்ந்தது தனிக்கதை. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Next Story