18 முறை ரஜினியுடன் மோதிய கார்த்திக்!.. ஜெயித்தது சூப்பர் ஸ்டாரா?.. நவரச நாயகனா?!...

by sankaran v |
Rajni, Karthick
X

Rajni, Karthick

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் 18 முறை நேரடியாக கார்த்திக் நடித்த பல படங்கள் மோதியுள்ளன. இதன் விவரத்தைப் பார்ப்போமா...

போக்கிரி ராஜா - இளஞ்ஜோடிகள்

முதன் முதலாக 1982 பொங்கல் அன்று ரஜினியின் போக்கிரி ராஜா படமும், கார்த்திக்கின் இளஞ்ஜோடிகள் படமும் ரிலீஸானது. இதில் 100 நாள்களுக்கு மேல் ஓடிய போக்கிரி ராஜா வின்னர். 1982 தமிழ்ப்புத்தாண்டு அன்று ரஜினியின் ரங்கா படமும், கார்த்திக்கின் நேரம் வந்தாச்சு படமும் ரிலீஸ். இதுல ரஜினி படம் தான் ஹிட்.

1982 ஆகஸ்ட் 14ல் ரஜினியின் எங்கேயோ கேட்ட குரல் படமும், கார்த்திக்கின் கண்ணே ராதா படமும் வெளியானது. இந்த மோதலிலும் ரஜினிதான் வின்னர். 1983 தமிழ்ப்புத்தாண்டு அன்று ரஜினிக்கு தாய்வீடு படமும், கார்த்திக்கிற்கு பகவதி புரமும் ரிலீஸ். இதுல 2 படங்களும் வெற்றி தான்.

தங்கமகன் - அபூர்வ சகோதரிகள்

1983 தீபாவளிக்கு ரஜினியின் தங்கமகன் படமும், கார்த்திக்கின் அபூர்வ சகோதரிகள் படமும் ரிலீஸ். இதுல கார்த்திக் படமும் வெற்றி தான். ஆனாலும் ரஜினி படம் தான் டாப். 1986 தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினியின் விடுதலை படமும், கார்த்திக்கின் நட்பு படமும் ரிலீஸ். விடுதலை பிளாப். நட்பு சூப்பர்ஹிட்.

குரு சிஷ்யன் - அக்னி நட்சத்திரம்

KS - AN

KS - AN

1988 தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினியின் குரு சிஷ்யன் படமும், கார்த்திக்கின் அக்னி நட்சத்திரம், கண் சிமிட்டும் நேரம் என இரு படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி, பிரபு நடித்த குரு சிஷ்யன் சூப்பர் டூப்பர் ஹிட். இது ஒரு வெள்ளிவிழா படம். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படமும் வெள்ளி விழா தான். கண் சிமிட்டும் நேரம் சரியாக ஓடவில்லை.

1988 தீபாவளிக்கு ரஜினியின் கொடி பறக்குது படமும், கார்த்திக்கின் காளிச்சரண் படமும் ரிலீஸ். இந்த மோதலில் இரண்டுமே பிளாப். 1989 மே மாதம் ரஜினிக்கு சிவா படமும், கார்த்திக்கிற்கு பாண்டி நாட்டு தங்கம் படமும் ரிலீஸ். இதுல கார்த்திக் தான் வின்னர்.

மாப்பிள்ளை - திருப்புமுனை

1989 தீபாவளிக்கு ரஜினியின் மாப்பிள்ளை படமும், கார்த்திக்கின் திருப்புமுனை படமும் ரிலீஸ். இதுல ரெண்டு படமும் ஹிட். ஆனாலும் ரஜினி தான் டாப். 1990 பொங்கல் அன்று ரஜினியின் பணக்காரன் படமும், கார்த்திக்கின் இதய தாமரை படமும் ரிலீஸ். இதுல வெள்ளி விழா கண்ட பணக்காரன் தான் வின்னர்.

தர்மதுரை - வணக்கம் வாத்தியார்

1991 பொங்கல் அன்று ரஜினியின் தர்மதுரை ரிலீஸ். அதன்பிறகு 2 வாரங்களில் வெளியானது வணக்கம் வாத்தியார். இதுல வெள்ளிவிழா கண்ட ரஜினி தான் வின்னர். 1992 பொங்கல் அன்று ரஜினியின் மன்னன் படமும், கார்த்திக்கின் அமரன் படமும் ரிலீஸ். இதுல கார்த்திக் படமும் ஹிட். ஆனால் வெள்ளிவிழா கண்ட ரஜினி தான் வின்னர்.

அண்ணாமலை - இது நம்ம பூமி

1992 ஜூன்ல ரஜினியின் அண்ணாமலை படமும், கார்த்திக்கின் இது நம்ம பூமி படமும் ரிலீஸ். இதுல 200 நாள்களுக்கு மேல் ஓடிய ரஜினி தான் டாப். 1993ல ரஜினியின் எஜமான் படமும், கார்த்திக்கின் சின்னக்கண்ணம்மா படமும் ரிலீஸ். இதுலயும் ரஜினி தான் வின்னர்.

வீரா - சீமான்

1994 தமிழ்ப்புத்தாண்டுக்கு ரஜினியின் வீரா படமும், கார்த்திக்கின் சீமான் படமும் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 1997 ஏப்ரல்ல ரஜினியின் அருணாச்சலம் படமும், கார்த்திக்கின் சிஷ்யா படமும் ரிலீஸ். இதுலயும் ரஜினி தான் வின்னர். 1999 ஏப்ரல்ல ரஜினியின் படையப்பா படமும், கார்த்திக்கின் நிலவே முகம் காட்டு படமும் ரிலீஸ். இதுல ரஜினி படம் மெகா வெற்றி.

Next Story