Connect with us

Cinema History

நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன்னு சொன்னா அதுக்குக் காரணமே பொன்மனச்செம்மல் தான்..!

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எம்ஜிஆருடனான தனது நினைவுகளைப் பற்றி இவ்வாறு பகிர்கிறார்.

நான் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ரசிகர். நான் சென்னை வந்தபோது புரட்சித்தலைவர் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு அவரோட வாழ்க்கை வரலாறை எல்லாம் பார்த்து அவர் எப்படி நடந்தாரு…அவரோட சாதனைகளை எல்லாம் பார்த்து ஆப் ஸ்கிரீன்ல வாழ்;க்கைல அவரோட பெரிய ரசிகனாயிட்டேன். அவரோட பெரிய வெறியனாவும் ஆயிட்டேன்.

அவருடைய சாதனைகள் 50களில் வந்து பெரிய ஆக்ஷன் ஹீரோவாக இருந்தார். அலிபாபா படம், மலைக்கள்ளன் வரும்போது 50ன்னு நினைக்கிறேன். சிவாஜி சார் அவர்களோட என்ட்ரி. பராசக்தி ஒரே ஷோல நடிப்புன்னா என்னங்கறதையே மாத்திட்டாங்க.

வசன உச்சரிப்பு என்னங்கறதையே மாத்திட்டாங்க. இதான் நடிப்பு. இதான் வசன உச்சரிப்பு. அப்படின்னு சொல்லி ஒரு புரட்சியையே உண்டாக்குனாங்க நடிகர் திலகம்.

MGR and Rajni

அந்தக்காலகட்டத்துல வந்து பெரிய பெரிய புரொடியூசர், டைரக்டர்ஸ் எல்லாம் சிவாஜி சார் பின்னாடி போனாங்க. எம்ஜிஆர் சார் கதை முடிஞ்சு போச்சுன்னு நினைச்சாங்க. அவ்ளோதான்…அப்படின்னு சொன் னாங்க. அப்ப வந்து எம்ஜிஆர் சார் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கினார்.

இவருக்குத் தேவையா இதுன்னு நினைச்சாங்க. அந்தப் படம் நாடோடி மன்னன். இதிகாசம் படைச்சது. டைரக்டர்ஸ் எல்லாம் நடுங்கிட்டாங்க. நான் யாருன்னு நிரூபிச்சாரு. நீங்க யாரும் வரலேன்னாலும் பரவாயில்ல. நானே படம் எடுத்து நானே டைரக்ட் பண்ணி நானே போறேன்னாரு.

அப்ப வந்து அவரு செட்டுக்குள்ள வந்தாரு… டைரக்டர்ஸ்க்கெல்லாம் வியர்க்கும். அந்த மாதிரி சாதனை படைச்சிக் காட்டியவர். சிவாஜிக்கு இணையா யாராலும் நடிக்க முடியாதுன்னு இருந்த காலகட்டத்துல ராஜ்கபூர் மாதிரி பெரிய பெரிய நடிகர்கள்லாம் சிவாஜியே மாதிரி ஒரு கட்டத்துல கூட நடிக்க முடியாது.

Rajni

அவ்ளோ பெரிய நடிகர்னு சான்றிதழ் கொடுத்த காலகட்டத்துல அவருக்குப் போட்டியாக எம்ஜிஆர் சார் நடிச்சி அவரை விட பெரிய மார்க்கட்ட சம்பாதிச்சி அவரை விட நிறைய பணம் சம்பாதிச்சி அவரை விட மிகப்பெரிய படங்களைக் கொடுத்து சாதனை பண்ணி நின்னாருல்ல. அது எம்.ஜி.ராமச்சந்திரன்.

சினிமாவுல அவர் செஞ்ச சாதனை. அரசியல்ல யாரு அவருக்குப் போட்டி. மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள். அவரை மாதிரி ஒரு எழுத்தாளர் இந்தியாவிலேயே கிடையாது. அவர் மாதிரி ஒரு பேச்சாளர் இந்தியாவிலேயே கிடையாது.

அவர் மாதிரி ஒரு அரசியல் ஞானி இந்தியாவிலேயே கிடையாது. அவரே மாதிரி ராஜதந்திரி இந்தியாவிலேயே கிடையாது. அவரை 13 ஆண்டுகள் கோட்டைக்குள்ளே அமர்ந்து முதல் அமைச்சர் சேர் பக்கமே திரும்பிப் பார்க்காத மாதிரி வைச்சவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்.

அது என்ன சாதாரண சாதனையா? 13 ஆண்டுகள். சாமானிய மக்களுக்கு கரண்ட் இல்லாத கிராமத்திற்கு கரண்ட் கொடுத்தாங்க.
ஒவ்வொரு குடிசையிலும் ஒவ்வொரு விளக்கு ப்ரீயா கொடுத்தாங்க. பஸ் வசதி செஞ்சாங்க. ரோடு போட்டாங்க. மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்துனாங்க. அந்தக்காலத்துல ஏழை மக்கள் டபுள்ஸ் போனா புடிச்சிடுவாங்க. அதை மாத்துனாங்க. சந்தேகத்தின் பேரில் கேஸ் போடலாம்னு சொன்னாங்க. அதை மாத்துனாங்க.

20 ஆயிரம் ரேஷன் கடைகளைக் கொண்டு வந்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்தாங்க. அதனால தான் வந்து அமெரிக்காவுல அவரு உடம்பு சரியில்லாம படுத்து இருந்த போதும், அந்த மகான் உயிரோட இருந்தாலே போதும்னு எலெக்ஷன் வரும்போது ஓட்டைப் பூராம் அவரு பேருக்குக் குத்துனாங்க. மாமனிதர். அவரோட சமாதில வந்து அந்த வாட்ச் சத்தம் இன்னும் கேக்குதான்னு இன்னிக்கும் காதை சமாதில வச்சிக் கேக்குறாங்க. அவர் ஒரு தெய்வப்பிறவி.

1978ல் எனக்கு நர்வஸ் பிரேக்டவுன். அந்த சமயத்துல என் உடல் தேறியதும் என்னை வந்து தி.நகர் ஆபீஸ்ல பார்க்கச் சொன்னாங்க. அப்போ எம்ஜிஆர், இந்த பாருப்பா. நடிகனுக்கு உடம்பு தான் மூலதனம். ஸ்டன்ட்ல எல்லாம் ரிஸ்க் எடுக்காத. அதுக்கு தனி ஆளுங்க இருக்காங்கன்னு சொன்னாங்க.

அதுக்கு அப்புறம் கல்யாணம் எப்பப் பண்ணிக்கிறன்னு கேட்டாங்க. இல்லே. இன்னும் பொண்ணு பார்க்கல. முதல்ல கல்யாணம் பண்ணிக்கங்க. நல்ல ஒரு குடும்பப் பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.

Rajni, Latha

முதல்ல பொண்ணப் பார்த்தா என்கிட்ட தான் சொல்லணும். நான் கல்யாணத்துக்கு வர்றேன் அப்படின்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறம் மனைவி லதாவ ரெண்டு மூணு மாசத்துல பார்த்தேன். நான் எங்க அண்ணாக்கிட்ட கூட சொல்லல. எம்ஜிஆர்கிட்ட தான் சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டாரு. நான் கல்யாணத்துக்கு வர்றேன்னாரு. அதுக்கு அப்புறம் அஞ்சாறு மாசமாச்சு. மிஸஸ் வீட்டுல கொஞ்சம் ஒத்துக்கல.

எம்ஜிஆர் என்கிட்ட கேட்கும்போது பொண்ணு வீட்ல கொஞ்சம் ஒத்துக்கறதுக்கு தயங்குறாங்க. அதான் லேட்டாகுதுன்னு சொன்னேன். அதுக்கு அப்புறம் இரண்டாவது நாளே ஒத்துக்கிட்டாங்க. எம்ஜிஆர் சார் ஒய்ஜிபி சார்கிட்ட போன் பண்ணி ஏன் தயங்குறீங்க.

நல்ல பையன். கொஞ்சம் கோபக்காரன். உங்க பொண்ணக் கொடுங்க. நல்லா வச்சிப்பான்னு சொல்லிருக்காங்க. நான் இப்ப வாழ்க்கையில சந்தோஷமா இருக்கேன்னு சொன்னா அதுக்குக் காரணமே பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள்.

google news
Continue Reading

More in Cinema History

To Top