புரட்சித்தலைவரின் அறிவுரைகள் எவ்வளவு நிதர்சனமான உண்மை...! நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்

by sankaran v |   ( Updated:2022-11-05 00:51:20  )
புரட்சித்தலைவரின் அறிவுரைகள் எவ்வளவு நிதர்சனமான உண்மை...! நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்
X

Rajnikanth

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஆலோசனைகள் கூறியுள்ளார். அதைப் பற்றி ரஜினிகாந்த் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா...

எம்ஜிஆரை சந்திக்க வேண்டும் என்று நான் பலமுறை முயற்சி செய்திருக்கிறேன். பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவனாக நான் இருந்தபோது சிவாஜி நடித்த படங்களைத் தான் அதிகமாகப் பார்ப்பேன். அதே போல எம்ஜிஆரின் வாள் சண்டைகளுக்கும் நான் ரசிகன்.

மூன்று முடிச்சு படத்தின் படப்பிடிப்பு வாகினி ஸ்டூடியோவில் நடைபெற்றது. அப்போது நான் முதன் முதலில் முக்கியமான பாத்திரத்தில் நடித்த படம்.

பக்கத்து ஃப்ளோரில் எம்ஜிஆர் நடித்துக் கொண்டிருந்ததைக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்கச் சென்றேன். ஆனால் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.

Rajni

நான் அப்போது புது நடிகனாக இருந்ததால் எனது வார்த்தைகளுக்கு மரியாதை கிடைக்கவில்லை. அவர் வெளியில் வந்தால் அவருடன் பேச வேண்டும் என்று நீண்ட நேரம் காத்திருந்தேன்.

இதற்குள் பாலசந்தர் செட்டிலிருந்து அழைப்பு வந்தது. திரும்பி வந்துவிட்டேன். அதன்பிறகு அவர் முதல் அமைச்சராகிவிட்டார்.

அதன்பிறகு எம்ஜிஆரை சந்தித்துப் பேசுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுமார் 55 நிமிடங்கள் என்னோடு பேசினார். இந்த நேரத்தில் அவரோடு 10 ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட அனுபவத்தைப் பெற்றேன்.

அவர் எனக்கு சொல்லிய அறிவுரைகள் ஏராளம். சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதிக ரிஸ்க் எடுத்துக் கொண்டால் தயாரிப்பாளர்களுக்குத் தான் நஷ்டம் ஏற்படும் என்றார்.

எம்ஜிஆர் கூறிய அறிவுரைகள் எத்தனை உண்மையானது என்பதை சமீபத்தில் தான் உணர்ந்தேன். நான் போட்ட சவால் என்ற படத்துக்காகக் குதிரையில் ஏறியபோது கீழே விழுந்ததால் கால் முறிவு ஏற்பட்டது.

MGR, Rajni

ஒரு மாத மருத்துவ சிகிச்சை நடந்தது. நான் நினைத்திருந்தால் டூப் போட ஏற்பாடு செய்திருக்கலாம். நான் ஒரு மாதம் ஓய்வு எடுத்துக் கொண்டதால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டார்கள்.

மேலும் நடிகர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம் கட்டுப்பாடு, நேரம் தவறாமை ஆகியவை குறித்தும் எம்ஜிஆர் கூறினார். நடிகர்கள் முன் மாதிரியாக இருந்தால் தான் மக்கள் மத்தியில் மரியாதை ஏற்பாடும் என்றார்.

கதையில் கவனம் செலுத்த வேண்டும். நடிப்பில் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் இப்போது விரும்புகிறேன். இதற்குக் காரணம் எம்ஜிஆர் தான். ஒரு மனிதன் எந்த அளவு உழைத்தால் வெற்றி பெற முடியும் என்பதை அவரிடம் பேசிய பிறகு தான் தெரிந்து கொண்டேன்.

Next Story