இயக்குனர் ராஜமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அனு இம்மானுவேல், கே. எஸ். ரவிக்குமார் மற்றும் சுனில் நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளியானது.
வரும் தீபாவளி பண்டிகைக்கு கார்த்தியின் ஜப்பான் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு புரமோஷனை தொடங்கியுள்ளார்.
இதையும் படிங்க: வருஷ கணக்கா படம் எடுக்குறவங்க லோகேஷ்கிட்ட கத்துக்கணும்!.. 5 படங்களை எத்தனை நாளில் முடித்தார் தெரியுமா?…
குக்கூ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜு முருகன். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், ஜோக்கர் படத்தின் மூலம் தேசிய விருது வென்றார். நடிகர் ஜீவாவை வைத்து அவர் இயக்கிய ஜிப்ஸி திரைப்படம் ஏகப்பட்ட சென்சார் கட்களை வாங்கிய நிலையில், திரைக்கு வரும்போது பெரிய சொதப்பலை சந்தித்தது.
இந்நிலையில், தனது ரூட்டை மொத்தமாக மாற்றி நடிகர் கார்த்தியை வைத்து கலகலப்பாக ஜப்பான் என்னும் கமர்ஷியல் படத்தை உருவாக்கி இருக்கிறார். வரும் தீபாவளிக்கு அந்த படம் வரவுள்ள நிலையில், அதன் அட்டகாசமான டீசர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது.
இதையும் படிங்க: லோகேஷ் பாக்ஸிங் கத்துகிட்டதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?… பலே ஆளுதான் போலயே
ஜப்பான் பெரிய கிரிமினல் என்றும், அவரைப் பிடிக்க மாநில போலீசார் தீவிர தேடலில் ஈடுபட்டு வருவதாகவும் ஏகப்பட்ட கொள்ளைகளை செய்திருப்பதாகவும் டீசர் முழுக்க பில்டப் காட்சிகள் அதிகரித்துள்ளன. கடைசியாக இடம்பெற்றுள்ள ஜப்பானை எத்தனை குண்டு போட்டாலும் அழிக்க முடியாது என்கிற வசனம் ராஜு முருகனின் அரசியல் பார்வையை வெளிகொண்டு வரும் விதமாக உள்ளது.
மாவீரன், ஜெயிலர், மார்க் ஆண்டனி என தொடர்ந்து தமிழ் சினிமாவிலேயே டேரா போட்டுள்ள தெலுங்கு நடிகர் சுனில் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். கே.எஸ். ரவிக்குமார் உயர் அதிகாரியாகவும், நம்ம வீட்டுப் பிள்ளை ஹீரோயின் அனு இம்மானுவேல் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன் போட்டிப் போட்ட சர்தார் திரைப்படம் வெற்றிப் பெற்ற நிலையில், இந்த ஆண்டு கார்த்தியுடன் மோதல் வேண்டாம் என பொங்கலுக்கு சென்று ரஜினியுடன் மோதவுள்ளார் சிவகார்த்திகேயன். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்கள் ஜப்பான் படத்துடன் மோதுகின்றன.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…