Connect with us
vijay

Cinema News

ரமணாவின் கதை திருட்டில் மாட்டிக் கொண்டு முழித்த கேப்டன்!.. இயக்குனரை சமாளிக்க அவர் கையாண்ட புது யுத்தி!..

வாசு,மணிவன்னன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் நந்தகுமார். இவர் விஜயகாந்தை வைத்து தென்னவன் என்ற படத்தை இயக்கினார். உதவி இயக்குனராக இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்த படம் கோடீஸ்வரன். ஆனால் இந்த படம் பணப்பிரச்சினையால் இதுவரை வெளிவரவில்லை.

vijay1

vjiayakanth

இவர் கதைகளை தேர்வு செய்யும் முறை கொஞ்சம் வித்தியாசமானது தான். பத்திரிக்கைகள், செய்தித்தாள்களில் வரும் உண்மைச்செய்திகளை கருத்தில் கொண்டு தான் தன் படங்களுக்கான கதைகளை தேர்வு செய்வாராம். அந்த வகையில் எழுந்தது தான் ரமணா படத்தின் கதை.

இதையும் படிங்க : விஜயை ஸ்கெட்ச் போட்டு தூக்க பிளானா?.. உதயநிதியை போர் மேகம் போல் சூழ்ந்த விநியோகஸ்தர்கள்..

ரமணா படத்தின் கதை ஆலோசனையில் இருக்கும் போது இது எப்படியோ முருகதாஸுக்கு தெரிந்து அவர் உடனே விஜயகாந்தை வைத்து ரமணா படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். ஆனால் இயக்குனர் நந்தகுமார் ரமணா படத்தின் கதையை ஆசான் என்ற பெயரில் நடிகர் சங்கத்தில் பதிவு செய்திருந்தார்.

vijay2

vijayakanth

ரமணா படத்தின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருப்பதை தெரியாமலேயே நந்தகுமார் ரமணா கதையை மீண்டும் விஜயகாந்திடம் சொல்ல போயிருக்கிறார். கதையைக் கேட்டு கோபமாக போய்விட்டாராம் கேப்டன். ஒன்றும் புரியாமல் திகைத்து நின்ற நந்தகுமாருக்கு அப்புறம் தான் தெரிந்திருக்கிறது இந்தக் கதை ரமணா என்ற பெயரில் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது என்று.

இதையும் படிங்க : கோலிவுட்டே படையெடுக்கும் ராமோஜிவ் பிலிம் சிட்டி!.. அதில் சூட் பண்ண முதல் தமிழ் படம் எதுனு தெரியுமா?..

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நந்தகுமார் நடிகர் சங்கத்திடம் புகார் செய்து அதற்கான ஆலோசனைகளில் ஈடுபட நந்தகுமாருக்கு இழப்பீடு தருவதாக முடிவு எடுத்திருக்கின்றனர். ஆனால் எனக்கு இழப்பீடு எதுவும் வேண்டாம், இதுபோன்று இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி ஒரு வழியாக சமாதானமாக போயிருக்கின்றனர்.

vijay3

vijayakanth nandhakumar

அதன்பிறகு சில நாள்கள் கழித்து விஜயகாந்த் நந்தகுமாருக்கு தொலைபேசியில் அழைத்து ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள், படம் பண்ணலாம் என கூற தென்னவன் கதையை சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார் விஜயகாந்த். ஆனால் அதே சமயத்தில் இயக்குனர் ஆ.என்.ஆர்.மனோகரிடம் கதை கேட்டு அவரையும் கமிட் செய்திருந்தாராம் விஜயகாந்த்.

இருவரையும் வரவழைத்து உங்கள் இரு படங்களிலும் நான் நடிக்கிறேன், இப்பொழுது வானத்தைப் போல படம் முடிந்து அதன் பிறகு யார் படத்தில் முதலில் நான் நடிக்க வேண்டும் என்று நீங்களே பேசிக் கொண்டு முடிவெடுத்துவிட்டு என்னை சந்தியுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.

vijay4

rnr manohar

அதன் பிறகு நந்தகுமார் அவரின் கதையை மனோகரிடம் சொல்ல மனோகருக்கு அந்த கதை பிடித்து போக தென்னவன் கதையையே முதலில் பண்ணிவிடலாம் என்று விஜயகாந்திடம் மனோகர் சொல்லியிருக்கிறார். மேலும் நந்தகுமார் தென்னவன் படத்தில் வசனகர்த்தாவாக மனோகரை பயன்படுத்திக் கொண்டாராம். யார் மனதையும் புண்படுத்தாமல் கேப்டன் செஞ்ச வேலை இருக்கே வியக்கத்தக்கது. இதை இயக்குனர் நந்தகுமாரே ஒரு பேட்டியில் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top