Connect with us
ramarajan

Cinema News

என் அக்காவுக்கே அழல!.. ஆனா விஜயகாந்துக்காக அழுதேன்!.. உருகும் மக்கள் நாயகன்!..

ரசிகர்களின் மனதில் மக்கள் நாயகனாக இடம் பிடித்தவர் ராமராஜன், டவுசர், பசுநேசன் என சில ரசிகர்கள் கிண்டலடித்தாலும் ரஜினி, கமல், விஜயகந்த் போன்ற நடிகர்கள் சினிமாவில் கோலோச்சிய போதே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இவர். துவக்கத்தில் உதவி இயக்குனராக பல படங்களிலும் வேலை செய்தார்.

ஒருகட்டத்தில் இயக்குனராகி 5 படங்களை இயக்கி இருக்கிறார் அதன்பின் ஹீரோவாக மாறி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் படம் வசூலில் பெரிய சாதனை செய்தது. சில தியேட்டர்களில் ஒரு வருடங்கள் ஓடியது. பல மாதங்கள் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய ஒரே படம் இதுதான்.

இதையும் படிங்க: இந்தியன்2 படத்தில் ரொமான்ஸ் செய்யும் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத்… கமலுக்கு இல்லாத ஸ்பெஷலா?

இவர் பெரும்பாலும் நடித்தது கிராமத்து கதைகளில்தான். அதுதான் அவருக்கு பொருத்தமாக இருந்தது. எம்.ஜி.ஆருக்கு பின் அதிக கிராமத்து கதைகளில் நடித்தது இவர்தான். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்பதால் அவரை அப்படியே பின்பற்றினார் ராமராஜன். எம்.ஜி.ஆரை போலவே கலர் கலராக உடையணிந்து நடித்தார்.

மனைவி நளினியுடன் விவாகரத்து, அரசியலுக்கு போனது என பல காரணங்களால் சினிமாவில் அவரின் மார்க்கெட் காலியானது. ஒரு கார் விபத்திலும் சிக்கினார். கடந்த 12 வருடங்களாக அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. பல வருடங்களுக்கு பின் அவரின் நடிப்பில் சமீபத்தில் சாமானியன் படம் வெளியானது.

இதையும் படிங்க: கோடியே கொடுத்தாலும் என் கொள்கையில் இருந்து மாற மாட்டேன்! அப்படி நடித்த நடிகர்கள் இதோ

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ராமராஜன் விஜயகாந்த் பற்றி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நான் உதவி இயக்குனராக இருந்தபோது ஒரு படத்தில் நடித்தார் விஜயகாந்த். சண்டைக்காட்சிகளில் அற்புதமாக நடிப்பார். அப்படி ஒருமுறை நடிக்கும்போது ஒரு நடிகருக்கு கை கீழே இறங்கிவிட்டது. அதை தனது கையாலே சரி செய்தார் விஜயகாந்த்.

மிகவும் நல்ல மனிதர். அரசியலில் அவர் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரை எனக்கு பிடிக்கும். என் சகோதரி இறந்தபோது கூட கண் மட்டுமே கலங்கினேன். ஆனால், அண்ணன் விஜயகாந்த் இறந்தபோது அவருக்காக அழுதேன்’ என ராமராஜன் சொல்லி இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top