ஷூட்டிங் முடிஞ்சா கிளம்பாம கதறி அழுத ராமராஜன்… எதுக்குனு கேட்டாதான் ஷாக் ஆகிடுவீங்க!..
மதுரையில் ஒரு தியேட்டரில் சீட்டு கிழித்துக் கொண்டிருந்த ராமராஜன் சென்னைக்கு வந்தது இயக்குநராக வேண்டும் என்றுதான்... ஆனால் ஒரு கட்டத்தில் எதிர்பாராத திருப்பமாக நடிகராகி, மக்கள் நாயகனாகவும் கொண்டாடப்பட்டார்.
சின்ன சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த ராமராஜனை நம்ம ஊரு நல்ல ஊரு படம் மூலம் அழகப்பன் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டான நிலையில், ராமராஜன் தனது இரண்டாவது படமாக கங்கை அமரனுடன் இணைந்த படம்தான் எங்க ஊரு பாட்டுக்காரன்.
இதையும் படிங்க: குக் வித் கோமாளியின் நான்காவது எலிமினேஷன்.. வெளியேறறப்பட்ட விஜய் டிவி பிரபலம்…
1987 தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகி தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டது. குறிப்பாக, இளையராஜா இசையில் உருவாகியிருந்த பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸானது. அதுவும், செண்பகமே செண்பகமே, மதுரை மரிக்கொழுந்து வாசம் பாடல்கள் இன்றளவும் எவர்கிரீன் மெலடி லிஸ்டில் முக்கியமான இடத்தில் இருப்பவை.
மதுரை மரிக்கொழுந்து வாசம் பாடலை சிறப்பு அனுமதி பெற்று கங்கை அமரன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாடியில் எடுத்திருப்பார். அந்த விஷூவல்களும் பரவலாகப் பேசப்பட்டது. பாடல்கள் அனைத்தையும் கங்கை அமரனே எழுத, படம் முழுவதும் பாடல்களில் ராமராஜனின் குரலாக பாடகர் மனோவின் குரல் ஒலித்தது.
'எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் பசு மாட்டிடம் பால் கரப்பது போன்ற காட்சிகள் இருந்தது. இதனால், நடிப்பதற்கு முன்பிலிருந்தே அந்த மாடுகளிடம் நன்றாக பழக ஆரம்பித்து இருக்கிறார் ராமராஜன். குறிப்பாக பேச்சி என்கிற மாடுதான் பிரதானமான காட்சிகளில் இடம்பிடித்திருந்தது.
இதையும் படிங்க: குக் வித் கோமாளியின் நான்காவது எலிமினேஷன்.. வெளியேறறப்பட்ட விஜய் டிவி பிரபலம்…
அதைவைத்துதான் பேச்சி பேச்சி பாடலையும் கங்கை அமரன் எழுதியிருந்தார். மாடுகளுடன் நன்றாகப் பழகியிருந்த ராமராஜன், படப்பிடிப்பு முடிந்த பிறகு மாடுகளை பார்க்கப் போவதில்லை என நினைத்து ஷூட்டிங்கின் கடைசி நாளில் கண்ணீரும் சிந்தியிருக்கிறார் ராமராஜன்.