நைட் 2 மணிக்கு! அதுவும் சட்டையில்லாமல் – ராமராஜன் பற்றிய ரகசியத்தை பகிர்ந்த நளினி

Published on: July 26, 2023
ramarajan
---Advertisement---

தமிழ் சினிமாவில் மண் மணம் மாறாத ஒரு மக்கள் கலைஞனாக திகழ்ந்து வந்தவர் நடிகர் ராமராஜன். 90களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார் ராமராஜன். 80 90களில் சினிமாவையே தன் வசம் ஆட்டிப்படைத்த ரஜினி கமல் இவர்களை தன்னுடைய அரை ட்ரவுசரின் மூலமாக ஒரேடியாக சாய்த்தவர். நடிகன் என்றால் ஸ்டைலான தோற்றம் அழகான முகம் என்பதை மொத்தமாக மாற்றி அமைத்தவர்.

ramarajan1
ramarajan1

செண்பகமே செண்பகமே என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் உள்ளங்கையில் வைத்தவர் ராமராஜன். இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி பெருமை சேர்த்தது. நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகர்களாக இருந்த பல பேரை பின்னுக்கு தள்ளி அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைத்தவர் ராமராஜன்.

இதையும் படிங்க : கடைசில கமல் சொன்னதுதான் நடந்தது! பாலசந்தர் ஆசைப்பட்டும் நிறைவேற்றாத ரஜினி

அதிலும் குறிப்பாக கரகாட்டக்காரன் திரைப்படம் ரஜினி கமல் விஜயகாந்த் பிரபு சத்யராஜ் என அனைத்து நடிகர்களையும் ஆச்சரியப்பட வைத்த படம். அதில் என்னப்பா இருக்கிறது என அனைவரையுமே பார்க்க வைத்த படம். அந்த அளவுக்கு ராமராஜன் நடிப்பில் வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படம் கிராமத்து வாசிகள் மத்தியில் இன்றுவரை ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

ramarajan2
ramarajan2

இவர் நடிகை நளினியை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருக்க 2000 ஆண்டில் நளினியை விவாகரத்து செய்தார். அதிலிருந்தே இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தன்னுடைய பிள்ளைகளின் திருமணத்திற்கு ராமராஜன் வந்து ஆசீர்வாதம் செய்திருக்கிறார். தற்போது நளினியும் ராமராஜன் ஒரு நண்பர்கள் போலவே பழகி வருகிறார்கள்.

இந்த நிலையில் அவ்வப்போது ராமராஜன் பற்றியும் அவருடைய நினைவலைகளை பற்றியும் பல பேட்டிகளில் பகிர்ந்து இருக்கிறார் நளினி. அவரை மறந்தால் தானே அவருடைய நினைவலைகளை பற்றி கூறுவது என ஒரு சிறு சுவாரசிய தகவல்களை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது படப்பிடிப்பு முடிந்து ராமராஜன் நைட் 2 மணிக்கு வீட்டிற்கு வந்தாலும் ரசம் சாதம் தான் விரும்புவாராம்.

ramarajan3
ramarajan3

ரசத்தோடு அப்பள பூ மற்றும் ஆம்லெட் இவைதான் ராமராஜனுக்கு மிகவும் பிடித்த சாப்பாடாம். மேலும் இருவருக்கும் திருமணம் முடிந்து முதன் முதலில் பார்த்த படம் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படமாம். அந்தப் படத்தை போய் பார்த்தபோது நளினிக்கு ஒரு மாதிரியாகிவிட்டதாம். ஏனெனில் அந்த படம் முழுக்க ராமராஜன் சட்டை இல்லாமல் தான் நடித்திருப்பார். அதனால் அவரை திரையில் பார்க்கும்போது மிகவும் வெட்கப்பட்டுக் கொண்டே தான் நளினி பார்த்தாராம்.

இதையும் படிங்க : எல்லாரும் என்னை திட்டினாங்க!. நான்தான் கேட்கல!.. மார்கெட் போனபின் புலம்பும் சந்தானம்!..

அதுமட்டுமில்லாமல் அந்த காலகட்டத்தில் கொட்டகை மாதிரி தான் தியேட்டர் இருக்கும். அதை ராமராஜனை திருமணம் செய்த பிறகு தான் முதன் முதலில் பார்த்தாராம் நளினி. அப்பொழுது ராமராஜன் இந்த மாதிரியாவது ஒரு தியேட்டரை நாம் வாங்க வேண்டும் என கூறுவாராம். இதை குறிப்பிட்டு சொன்ன நளினி அவர் சொன்னதிலிருந்து அவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி நாலு தியேட்டரை வாங்க வைத்து விட்டேன் என கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.