துணிவு அஜித்தையே தூக்கி சாப்பிடுறாரே!.. வங்கி கொள்ளையில் மிரட்டும் ராமராஜனின் சாமானியன் டிரெய்லர்!

தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகி உள்ள சாமானியன் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

63 வயதிலும் ஆக்‌ஷனில் அந்தர் கிளப்பும் விதமாக ராமராஜன் வங்கி கொள்ளை கதையை எடுத்துக் கொண்டு தூள் கிளப்ப தயாராகி விட்டார். கடந்த ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் கதை போலவே கிட்டத்தட்ட இந்த படத்தின் கதையும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கணவரை இழந்த பெண்ணுக்கு கேபிஒய் பாலா செய்த உதவி!.. அடேங்கப்பா அந்த ஹீரோவும் கூட்டு சேர்ந்துட்டாரே!..

சாமானிய மக்களிடம் இருந்து வங்கிகள் திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கும் பணத்தை அந்த மக்களுக்கே ராமராஜன் போராளியாக மாறி திருப்பிக் கொடுக்க போராடும் கதை தான் சாமானியன் என்கின்றனர்.

ராமராஜனின் இந்த மிஷன் இம்பாசிபிலுக்கு துணையாக ராதா ரவி மற்றும் எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ளனர். தனது மகளை வளர்த்து ஆளாக்கும் தந்தை மகளின் பிரிவால் எடுக்கும் விஸ்வரூப முயற்சி தான் இந்த வங்கியில் நடைபெறும் கொள்ளையை தடுப்பது என்பது போல டிரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: செந்தூரப்பாண்டி படப்பிடிப்பில் கேப்டன் செய்த செயல்!.. நெகிழ்ந்து போன விஜய்!.. என்ன மனுஷன்யா?!..

காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ளார். பல பிரபலங்கள் நடித்துள்ள சாமானியன் திரைப்படத்துக்கு எப்போது ராமராஜன் படங்களுக்கு இசையமைக்கும் இளையராஜாவே இந்த முறையும் இசையமைத்ஹ்டுள்ளார்.

பல வருட கேப்புக்கு பிறகு மீண்டும் ராமராஜன், மைக் மோகன், பிரசாந்த் எல்லாம் நடித்து வருவது 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு செம என்டர்டெயின்மென்ட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Next Story