Cinema News
சிங்கப்பூரில் வேட்டி கட்டி ஆடிய ஒரே நடிகர் இவர்தானாம்! இவ்ளோ வேடிக்கை நடந்துருக்கா?
Actor Ramarajan: மதுரை மன்னன் ராமராஜன். ஆரம்பத்தில் அவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அங்கு இருந்த ஒரு டூரிங் டாக்கீஸ் இல் வேலை செய்து வந்தார். அதன் பிறகு ஒரு தியேட்டரில் ராமராஜன் வேலைக்கு சேர்ந்தார். அந்த தியேட்டரில் அவர் டிக்கெட் கொடுக்கும் வேலையில் சேர்ந்தார். அப்போது தனக்கு நடிப்பில் இருக்கும் ஆர்வம் பற்றி அந்த தியேட்டர் முதலாளி இடம் ராமராஜன் சொல்ல அவர் அவருக்கு தெரிந்த சினிமா பிரபலங்கள் சிலரிடம் ராமராஜனை பற்றி அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் காரணமாகவே ஒரு படத்தில் ஒரு வாலிபர் வேடத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு ராமராஜனுக்கு கிடைத்தது. அதன் பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்து ஒரு முன்னணி நடிகராக உயர்ந்தார் ராமராஜன். நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் இருந்தார். அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன் என்பது மாதிரி அவர் நடித்த படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றி பெற்ற படங்களாக அமைந்தன.
இதையும் படிங்க: நடிகரால் தற்கொலைக்கு முயன்ற ஸ்ரீபிரியா! இப்படி ஒரு காதலா? எந்த நடிகருடன் தெரியுமா?
ரஜினிக்கே டப் கொடுத்த நடிகராக ராமராஜன் உயர்ந்து வந்தார் .இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக சாமானியன் என்ற படத்தில் நடித்து அந்த படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதனால் அந்த படத்தை பற்றிய பிரமோஷனில் கலந்துகொண்டு பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார் ராமராஜன்.
அப்படி ஒரு பேட்டியில் அவர் கூறிய ஒரு சுவாரசிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது கிராமத்து மண்வாசனையுடன் கூடிய கதைகளில் நடிக்க கூடியவர் ராமராஜன். எதையுமே இயற்கையாக இருக்க வேண்டும் என்றும் விரும்பக் கூடியவர். நடிப்பிற்காகவோ சினிமாவிற்காகவோ எதையும் அலட்டிக் கொள்ளாதவர்.
இதையும் படிங்க: பிரைவசி வேண்டும்னா எதுக்கு கல்யாணம் பண்றீங்க!.. ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவகாரம்.. பிரபலம் சுளீர்!
அப்படி ஊரு விட்டு ஊரு வந்து என்ற படத்தில் சொர்க்கமே என்றாலும் என்ற பாடலுக்காக சிங்கப்பூரில் போய் அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மாட்டு வண்டியை அங்கு எடுத்துக்கொண்டு ஓட்டுவது மாதிரி படமாக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தார்களாம். ஆனால் அப்போது மாட்டு வண்டியை பிளைட்டில் ஏற்ற மாட்டோம் என சொன்னதனால் மாட்டு வண்டியை வைத்து அந்த காட்சியை படமாக்கவில்லை என்றும் ஆனால் வேட்டி கட்டி அந்தப் பாடல் காட்சியில் நடித்தேன். அதனால் சிங்கப்பூரில் முதன்முதலில் வேட்டி கட்டி ஆடி நடித்த ஒரே நடிகர் நானாகத்தான் இருப்பேன் என மிகப் பெருமையாக கூறினார் ராமராஜன்.