மதுரை மேலூரில் ஒரு தியேட்டரில் வேலை செய்து வந்தவர்தான் குமரேசன்.. அதன் பின் சென்னை வந்து இயக்குனர் ராமநாராயணனிடம் உதவியாளராக சில படங்களில் வேலை செய்தார். அதன்பின் சில மண்ணுக்கேத்த பொண்ணு, மருதாணி, ஹலோ யார் பேசுறது, மறக்க மாட்டேன் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார்.
ஒரு கட்டத்தில் தனது பெயரை ராமராஜன் என மாற்றிக்கொண்டு நடிகராக மாறினார். தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து வெற்றி கொடுத்தார். இவர் நடிப்பில் வெளியான 95 சதவீத படங்கள் கிராமத்து கதைகள்தான். இவர் நடித்து ரிலீஸான கரகாட்டக்காரன் திரைப்படம் அசத்தலான வெற்றியைப் பெற்று பெற்றது.. சில திரையரங்குகளில் இப்படம் ஒரு வருடம் கூட ஓடியது.
80களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக ராமராஜன் இருந்தார்.. இவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தனர். இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் கொடுத்த பேட்டியில் ராமராஜன் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். நான் சென்னை வந்தபோது எல்டாம்ஸ் சாலையில் தங்கியிருந்தேன்.. எனது அறைக்கு அருகில்தான் செந்தில், பார்த்திபன் ஆகியோர் தங்கியிருந்தனர். கவுண்டமணி அவ்வப்போது அறைக்கு வந்து விட்டுப்போவார்..
குமரேசன் என்கிற பெயர் கேட்சிங்காக இல்லை. எனவே பெயரை மாற்ற நினைத்தேன்.. எனது அப்பா பெயர் ராமையா.. நான் பிறந்தது ராமநாதபுரம்.. எல்டாம் சாலையில் நான் தங்கியிருந்த விடுதியின் சொந்தக்காரரின் பெயர் ராமசாமி.. என்னை வேலைக்கு சேர்த்துவிட்டவரின் பெயர் ராமசாமி. இப்படி ராம் என்பது எனக்கு நெருக்கமான ஒன்றாகவே இருந்தது. ஒருபக்கம் இளையராஜா, பாரதிராஜா ஆகியோர் கலக்கி கொண்டிருந்தார்கள். எனவே ராமராஜா என என யோசித்தேன். ஆனால் அது நான்கு எழுத்துதான் வருகிறது.. எனவே ராமராஜன் என வைத்துக் கொண்டேன்’ என சொல்லியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…
நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…