என் படத்துக்கு அவர்தான் வேணும்!. அடம்பிடித்து பட்ஜெட்டை ஏத்திவிட்ட ராமராஜன்..

Published on: September 22, 2023
ramarajan
---Advertisement---

ராமராஜன் தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவர். இவர் நம்ம ஓரு நல்ல ஓரு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் எங்க ஊரு பாட்டுகாரன் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபாலமானார்.

வண்ண வண்ண ட்ரவுசர்கள் அணிந்து நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். இவர் ஒன்று எங்கல் ஜாதியே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் நடித்த கரகாட்டகாரன் திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர்களையும் சம்பாதித்தார்.

இதையும் வாசிங்க:ஜெயலலிதா மட்டும் அத செய்யலைனா ரஜினியின் நிலைமை? ரெட் கார்டு சம்பவத்தில் உண்மையை போட்டுடைத்த பிரபலம்

இவர் சினிமா நடிகையான நளினியை திருமணம் செய்து கொண்டார். பின் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்தும் செய்து கொண்டனர். பின் அரசியலில் வலம் வந்த இவரால் அதில் நீடித்து நிற்க முடியவில்லை.

இவரின் படங்கள் அனைத்திலுமே பெரும்பாலும் இளையராஜாவின் இசையைத்தான் காண முடியும். இளையாராஜாவின் பாடல் வரிகளே இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது என்று கூட கூறலாம். இவர் தற்போது சாமியன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க:தத்தெடுப்பதில் இவ்ளோ சிக்கல் இருக்கா?.. ஆர் யூ ஓகே பேபி படம் எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!..

இப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்து தர வேண்டும் என ராமராஜன் கூறிவிட்டாராம். அதனால் இப்படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளாராம். மேலும் இவர் இப்படத்திற்கு பின் மற்றுமொரு படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

படக்குழு அப்படத்தில் புதுமையான இசையை கொண்டுவரவேண்டும் எனும் நோக்கில் இசையமைப்பாளர் ஜிப்ரானிடம் பேசியுள்ளனர். ஆனால் அதற்கும் ராமராஜன் நோ சொல்லி விட்டாராம். என்னுடைய படத்தில் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என கட்டாயமாக கூறிவிட்டாராம்.  ஜிப்ரானுக்கு சம்பளம் என்றால் ரூ.40 லட்சம் போதும். இளையராஜா என்றால் ரூ.1 கோடி. ஆனால், படத்தின் ஹீரோ சொல்லிவிட்டதால் தயாரிப்பாளருக்கும் வேறு வழியில்லை. அவரின் பட்ஜெட்டில் ரூ.60 லட்சம் பில் அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இளையராஜா மற்றும் ராமராஜனின் கூட்டணி பலபடங்களிலும் வெற்றி அடைந்ததை அடுத்து அவர் இப்படியான முடிவுகளை எடுக்கிறார் என பேசப்படுகிறது.

இதையும் வாசிங்க:சிவாஜி படத்த பார்க்க மாட்டேன்… என் மேல நம்பிக்கை இருந்தா குடுங்க… ஓபனா சொன்ன நடிகர்…

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.