Cinema News
எனக்கு மட்டும்தான் பாட்டு போட்டாரா இளையராஜா?!.. கோபத்தில் பொங்கிய ராமராஜன்…
நடிகர் ராமராஜனின் படங்கள் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தது இளையராஜாவின் பாடல்கள்தான். ராமராஜன் – இளையராஜா கூட்டணி என்றாலே 80களில் கேசட் விற்பனைகள் பெரிய லாபத்தை கொடுக்கும். அதோடு, ஆடியோ உரிமையும் அதிக விலைக்கு விற்கப்படும்.
இயக்குனர் இராமநாராயணனின் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலை செய்து பின் உதவி இயக்குனராக மாறி அவர் இயக்கிய பல படங்களில் வேலை செய்துவிட்டு பின் இயக்குனராக மாறினார் ராமராஜன். அதன்பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி படங்களில் நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: ராமராஜன் சந்தித்த கார் விபத்து!. மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!.. தெரியாம போச்சே!…
அவர் நடிப்பில் படங்கள் நல்ல வசூலை பெறவே தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். கரகாட்டக்காரன் படத்திற்கு பின் அவருக்கான மவுசு பல படங்கு அதிகரித்தது. ராமராஜனின் எல்லா படங்களுக்கும் இளையராஜாவே இசையமைத்தார். பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனது. ‘ராமராஜனுக்கு போடுவது போல நீங்கள் எனக்கு கூட பாடல்கள் போடுவதில்லை’ என இளையராஜாவிடம் கமலே செல்லமாக கோபப்பட்ட சம்பவமெல்லாம் நடந்தது.
ஆனால், ‘அவனுக்கு அப்படி அமையுது.. எல்லோருக்கும் நான் ஒரே மாதிரிதான் வேலை பாக்குறேன்’ என சொன்னார் இளையராஜா. அதேநேரம், ராமராஜனின் மார்க்கெட் சரிந்தபின் தேவா, சிற்பி ஆகியோர் பக்கம் போனார் ராமராஜன். அந்த படங்கள் எதுவும் பெரிதாக ஒடவில்லை. ஒருகட்டத்தில் பீல்ட் அவுட ஆனார் ராமராஜன்.
இதையும் படிங்க: பாக்கியராஜ், அஜீத்தை விட ராமராஜன் ஒரு படி மேல… பிரபலம் சொல்றது இதுதான்..!
தற்போது 12 வருடங்கள் கழித்து சாமானியின் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். எனவே, பல ஊடகங்களுக்கும் ராமராஜன் பேட்டி கொடுத்தார். அப்போது தனது படங்களுக்கு இளையராஜா இசையமைத்தது பற்றி பேசிய அவர் ‘லாரி, பஸ், ஆட்டோ என எல்லா இடத்திலும் என் பாடல்கள் போடுகிறார்கள். ஒரு பெண் என்னிடம் ‘வாடகை காரில் போனேன். தூக்கம் வரவில்லை. உங்கள் பாட்டைத்தேன் கேட்டேன்’ என சொன்னார். அதற்கு காரணம் அண்ணன் இளையராஜா மட்டுமே.
அதேநேரம், எனக்கு மட்டுமல்ல கமல் சாருக்கு ‘ஹேப்பி நியூ இயர்.. இளமை இதோ இதோ’ பாடலை போட்டு கொடுத்தார். ரஜினி சாருக்கு ‘வச்சிக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள’ பாட்டை போட்டார். இந்த பாடல்களில் நான் நடித்தால் நன்றாக இருக்காது. ஒவ்வொருவரின் உடல் மொழிக்கு ஏத்த மாதிரி அவர் பாட்டு போட்டு கொடுத்தார்’ என ராமராஜன் சொல்லி இருக்கிறார்.